ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் மோதும் மிரட்டல் போட்டிக்கான கணிப்புகள் ஒரு பார்வை..!! | rr vs csk match 2023 prediction

ஐபிஎல் 2023 அரங்கில் முதல் கட்ட லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட லீக் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது, இந்த வரிசையில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாட உள்ளார்கள். இந்நிலையில் இந்த முக்கிய போட்டிக்கான பிளேயிங் லெவன், பிட்ச் அறிக்கை, வெற்றி கணிப்பு, ட்ரீம் லெவன் டீம் கணிப்பு உள்ளிட்ட முக்கிய விவரங்களை காண்போம்.
இதற்கு முன் 2023 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய போட்டி அதிரடி ஆட்டம் அரங்கேறியது, இறுதி வரை பரபரப்பாக சென்ற ஆட்டத்தில் கடைசி பந்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியது. இதனால் மீண்டும் ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகள் மோத உள்ள போட்டியில் கட்டாயம் அதிரடியை எதிர்பார்க்கலாம் என்று கூறினால் மிகையில்லை.
போட்டி குறித்த விவரம் :
37 வது லீக் போட்டி : ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்
நேரம் & நாள் : 7:30 p.m & வியாழக்கிழமை
தேதி : 27 ஏப்ரல் 2023
மைதானம் : சவாய் மான்சிங் மைதானம், ஜெய்பூர்.
ஒளிபரப்பு தளம் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் & ஜியோ சினிமா.
ட்ரீம் லெவன் டீம் கணிப்பு :
கேப்டன் - அஜிங்க்யா ரஹானே
துணை கேப்டன் - டெவோன் கான்வே
விக்கெட் கீப்பர் - சஞ்சு சாம்சன்
பேட்ஸ்மேன்கள் - ஷிவம் துபே, ஜோஸ் பட்லர், ருதுராஜ் கெய்க்வாட்
ஆல்-ரவுண்டர்கள் - ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர்
பந்துவீச்சாளர்கள் - துஷார் தேஷ்பாண்டே, மஹேஷ் தீக்ஷனா, சந்தீப் சர்மா.
பிட்ச் அறிக்கை :
இந்த போட்டி நடைபெற உள்ள ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானம் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்த உதவும் என்று தெரிய வந்துள்ளது. இங்கு சராசரியாக 180 ரன்கள் பதிவாகி உள்ளது, மேலும் சேஸிங் செய்யும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றி வாய்ப்பு :
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பொறுத்தவரை கேப்டன் சஞ்சு சாம்சன் தலைமையில் நடப்பு தொடரில் 7 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் 3 வது இடத்தில் உள்ளது. அதே சமயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது கேப்டன் எம் எஸ் தோனி தலைமையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
அதே சமயத்தில் சென்னை அணி நடப்பு தொடரில் ராஜஸ்தான் அணியிடம் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த போட்டியில் முழுவீச்சில் செயல்பட்டு வெற்றி பெறும் என்று பெரிதும் எதிர்பார்க்க படுகிறது, எனவே மிரட்டல் பார்மில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேயிங் லெவன் (தோராயமான) : ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன்(கேப்டன்/வி.கீ), தேவ்தத் படிக்கல், ஷிம்ரோன் ஹெட்மையர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், டிரென்ட் போல்ட், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்.
சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன் (தோராயமான) : ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம் எஸ் தோனி(கேப்டன்/ வி.கீ ), மதிஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, மஹேஷ் தீக்ஷனா.