ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்ர் கிங்ஸ் மோதும் போட்டிக்கான டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் ..!! | rr vs csk 2023 toss update

ஐபிஎல் 2023 தொடரில் இன்றைய போட்டியில் கேப்டன் எம் எஸ் தோனி தலைமையில் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சஞ்சு சாம்சன் தலைமையில் ஆன ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோத உள்ளார்கள். இந்த மிரட்டல் போட்டிக்கான டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் குறித்த விவரங்கள் வெளியானது.
இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுக்குமா என்று பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. கடைசியாக நடப்பு தொடரில் ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகள் மோதிய போட்டியில் அதிரடி ஆட்டம் அரங்கேறியது.
இந்நிலையில் மீண்டும் ஒரு அதிரடி ஆட்டத்தை இன்றைய போட்டியில் இரு அணிகளின் வீரர்கள் கட்டாயம் அரங்கேற்றுவார்கள் என்று கூறினால் மிகையில்லை.தற்போதைய நிலையில் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் 3வது இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்ய முடிவு செய்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் தோனி தலைமையில் முதலில் பவுலிங் செய்ய களமிறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேயிங் லெவன் : ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன்/வி.கீ), ஷிம்ரோன் ஹெட்மையர், துருவ் ஜூரல், ஆர் அஷ்வின், சந்தீப் சர்மா ஆடம் ஜம்பா,ஆடம் சாம்பா, யுஸ்வேந்திர சாஹல்.
சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன் : ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, சிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, எம் எஸ் தோனி (கேப்டன்/ வி.கீ), துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா, மதீஷா பத்திரனா, ஆகாஷ் சிங்.