யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியில் ராஜஸ்தான் அசத்தல்..!! சென்னை சூப்பர் கிங்ஸ் இலக்கை எட்டுமா..?? | rr vs csk 2023 first innings

ஐபிஎல் அரங்கில் இன்றைய போட்டியில் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்ஸ்மேன்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார்கள்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்ய முடிவு செய்த நிலையில், களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி துவக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நல்ல தொடக்கத்தை அளித்தார்கள்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சென்னை அணி பவுலர்களை சிதறடித்து அதிரடியாக ரன்கள் குவித்தார்கள், குறிப்பாக 4 சிக்ஸர் மற்றும் 8 பவுண்டரி உட்பட 43 பந்துகளில் 77 ரன்கள் பதிவு செய்து இறுதியாக துஷார் தேஷ்பாண்டே பந்தில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் சென்னை சூப்பர் கிங்ஸ் பவுலர்கள் களத்தில் சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தி ராஜஸ்தான் அணி வீரர்கள் ரன் பெற முடியாமல் தடுத்தார்கள், குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அனுபவ வீரர்கள் வேகமாக ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்கள். இறுதியாக களமிறங்கிய ராஜஸ்தான் அணி வீரர்கள் துருவ் ஜூரல் மற்றும் தேவ்தத் படிக்கல் அதிரடியில் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 202 ரன்கள் பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிரடிக்கு பதிலடி கொடுத்து சேப்பாக்கத்தில் ஏற்பட்ட தோல்விக்கு ஈடுகட்டும் வகையில் இந்த போட்டியில் வெற்றி பெறுமா.?? என்பதை பொறுத்திருந்து காண்போம்.