ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் தோல்வி ..!! | rr defeated csk for 2nd time in ipl 2023

ஐபிஎல் அரங்கில் இன்று நடைபெற்ற 37 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி தோற்கடித்து வெற்றி பெற்றது, குறிப்பாக , நடப்பு தொடரில் சென்னை அணிக்கு எதிராக 2 வது முறையாக வெற்றி பெற்று சஞ்சு சாம்சனின் ராஜஸ்தான் அணி அசத்தியுள்ளது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து தொடக்கத்தில் இருந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார்கள். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி 77(43) ரன்கள் பதிவு செய்தார், எனவே 20 ஓவர்
கள் 202 ரன்கள் பதிவு செய்தனர்.
இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துவக்க வீரர்கள் ருதுராஜ் மற்றும் கான்வே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். சென்னை அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டெவோன் கான்வே 8(16) ரன்களில் ஆடம் ஜம்பா பந்தில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்து பெவிலியன் திரும்பினார்.
அதே சமயத்தில் மற்றொரு துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார், குறிப்பாக 1 சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரி அடித்து நன்றாக விளையாடி வந்த நேரத்தில் 47(29) ஆடம் ஜம்பா இடம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பின் களமிறங்கிய சென்னை அணியின் முன்னணி வீரர்கள் ரஹானே மற்றும் ராயுடு விக்கெட்களை ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரே எடுத்து போட்டியின் போக்கை மாற்றினார்.
சென்னை அணி சார்பில் அடுத்து களமிறங்கிய ஷிவம் துபே இறுதிவரை போராடி அரைசதம் பதிவு செய்தார், குறிப்பாக 52(33) ரன்கள் பதிவு செய்து ஆட்டமிழந்தார். அதே சமயத்தில் சென்னை அணிக்கு எதிராக அசத்தல் பவுலிங்கை ராஜஸ்தான் பவுலர்கள் வெளிப்படுத்திய நிலையில் 20 ஓவர்கள் முடிவில் வெறும் 170 ரன்கள் மட்டுமே பதிவு செய்ய முடிந்தது.
இந்நிலையில் சஞ்சு சாம்சன் தலைமையில் ஆன ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.ஐபிஎல் 2023 அரங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 வது முறையாக மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வியை தழுவி உள்ளது.