அதிரடியான ஆட்டத்தால் 3வது வெற்றியை பதித்த பெங்களூரு.. தொடர்ந்து சொதப்பிய பஞ்சாப்.. | IPL 2023 PBKS vs RCB Match Highlights

ஐபிஎல் 2023 தொடரின் 27 வது லீக் போட்டியில் சாம் குர்ரன் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி எதிர்க்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் சாம் குர்ரன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் முன்னணி வீரர்களான வீராட் கோலி மற்றும் பாப் டு பிளெசிஸ் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
முதலில் கோலி அதிரடி காட்டி பிறகு அமைதியாக, டு பிளெசிஸ் ரன் வேட்டையில் ஈடுபட்டார். இந்த கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்த நிலையில், விராட் கோலி 59 (47) ரன்னில் ஹர்ப்ரீத் ப்ரார் பந்துவீச்சில் அவுட்டானார். அடுத்த பந்திலேயே மேக்ஸ்வெல் டக் அவுட்டானார். அதன்பின், ஹர்பிரித் பிராருக்கு ஹாட்டிரிக் வாய்ப்பு கிடைத்தது.
அதிரடியாக ஆடிய டூ பிளசிஸ் 56 பந்தில் 5 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 84 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 7 ரன்களில் வெளியேற, இறுதியில் பெங்களூரு அணி அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது. அதன்பின் பேட்டிங் செய்ய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங் மற்றும் அதர்வா டைடே கூட்டணி களமிறங்கியது. பெங்களூரு அணி தரப்பில் முகமது சிராஜ் முதல் ஓவரை வீச, 2வது பந்திலேயே அதர்வா டைடே 4(2) அவுட்டானார். இதன் மூலம் முதல் ஓவர் முடிவில் பஞ்சாப் 9 ரன்கள் எடுத்தது.
அதன்பிறகு, பஞ்சாப் பேட்ஸ்மேன் மேத்யூ ஷார்ட் அவுட்டானார். 6 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி 51 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. தொடர்ந்து களம்கண்ட ஹர்பிரீத் சிங் பாட்டியா 13(9) ரன்கள் எடுத்து வெளியேற, பஞ்சாப் அணி தடுமாற தொடங்கியது. பிறகு, 51 பந்துகளில் 78 ரன்கள் எடுக்க வேண்டும் விளையாட, ஷாருக் கான் 7(5) வெளியேறினார்.
இறுதியில், 18வது ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து போராடி தோற்றது பஞ்சாப் அணி. ஆரம்பத்திலேயே அதிரடி காட்டி 24 ரன்கள் வித்தியாசத்தில் அசால்ட்டாக வெற்றியை கைப்பற்றியது பெங்களூர் அணி. இது பெங்களூர் அணிக்கு 3வது வெற்றி. இது பஞ்சாப் அணிக்கு 3வது தோல்வி ஆகும்.