WPL 2023 : இளம் வீராங்கனைகள் அசத்தல்..!! முதல் வெற்றியை பதிவு செய்தது பெங்களூர்..!!

இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் முதல் முறையாக நடத்தப்பட்டு வரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்து அசத்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, இந்த முதல் வெற்றியின் மூலம் தொடரில் மீண்டும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி எழுச்சி பெற்றுள்ளது.
மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் 13 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் உ.பி.வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை மேற்கொண்டார்கள். இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பவுலிங் செய்ய தேர்வு செய்தது, எனவே பேட்டிங் செய்ய களமிறங்கிய உ.பி. வாரியர்ஸ் அணி ஆரம்பம் முதலே மிகவும் திணறியது.
உ.பி.வாரியர்ஸ் அணியின் முன்னணி வீரர்கள் அனைவரும் உடனுக்குடன் ஆட்டமிழந்த நிலையில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அணியின் அனுபவ வீராங்கனை கிரேஸ் ஹாரிஸ் 46(32) ரன்கள் பதவி செய்து ஆட்டமிழந்தார். பெங்களூரு அணி அசத்தல் பவுலிங் வெளிப்படுத்திய நிலையில் 19.3 ஓவர்களில் உ.பி.வாரியர்ஸ் அணி 135 ரன்கள் பதிவு செய்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனை அடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் அணி கேப்டன் மற்றும் துவக்க வீராங்கனை ஆன ஸ்மிருதி மந்தனா டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதன்பின் களமிறங்கிய அணியின் வீராங்கனைகளும் உடனுக்குடன் ஆட்டமிழந்தது ஏமாற்றம் அளித்தனர், இறுதியாக அணிக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீராங்கனை கனிகா அஹுஜா 46(30) ரன்கள் பதிவு செய்து ஆட்டமிழந்தார்.
அதன்பின் அணியின் மற்றொரு இளம் வீராங்கனை ரிச்சா கோஷ் பொறுப்புடன் இறுதிவரை விளையாடி 31*(32) ரன்கள் பெற்று அணிக்கு முதல் வெற்றியை பெற்று தந்து அசத்தினார்.பெங்களூர் அணியின் வெற்றிக்கு உதவும் வகையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கனிகா அஹுஜா ஆட்டநாயகி விருதை வென்றார்.
மேலும் இந்த தொடரில் பெங்களூரு அணி தொடர்ச்சியாக பெற்ற தோல்விகளுக்கு முடிவுகட்டி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.