உலகக்கோப்பை தொடரில் புதிய மாற்றம் வேண்டும்..! முன்னணி வீரர்கள் அஸ்வின், ரோஹித் கோரிக்கை..!

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: January 18, 2023 & 14:30 [IST]

Share

இந்திய மண்ணில் இந்த ஆண்டு இறுதியில் ஒரு நாள் உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது, இந்த தொடரில் கண்டிப்பாக உலகக் கோப்பையை பெற வேண்டும் என்று இந்திய அணி சார்பில் முழு வீச்சில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த உலக கோப்பை தொடரில் ஒரு புதிய மாற்றத்தை இந்திய வீரர் அஸ்வின் முன்மொழிந்தார் இதற்கு அணியின் கேப்டன் ஆதரவு தெரிவித்துள்ளார்.   

இந்திய அணி இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியது, அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க உள்ளது. இந்திய அணி உட்பட அனைத்து அணிகளும் இந்த போட்டிகளை ஒரு நாள் உலக கோப்பை தொடருக்கான பயிற்சியாக பார்த்து தான் களமிறங்க உள்ளார்கள்.

இந்திய அணியின் முன்னணி ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் உலக கோப்பை தொடரை பற்றி அண்மையில் தனது வலைதள பக்கத்தில் பேசிய பொழுது ஒருநாள் போட்டியை பொறுத்தவரை மதியம் 1:30 மணிக்கு ஆரம்பிப்பார்கள் போட்டி முடிய இரவு 10:00 ஆகும்,இந்த போட்டியில் பாதியில் பனிப்பொழிவு காரணமாக மைதானத்தில் ஏற்படும் தாக்கம் போட்டியையே தலைகீழாக மாற்றி விடும்.

ஒரு நாள் போட்டியில் ஒரு அணி தனது திறனால் வெற்றி பெறாமல் டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்தால்,போட்டியின் இரண்டாவது பாதியில் ஏற்படும் பனிப்பொழிவு (டியூ பாக்டர்) காரணமாக டாஸ் வெல்லும் அணி வெற்றி பெறும் நிலை ஏற்படுகிறது.அதை மாற்றும் வகையில் போட்டியை 11:00 மணிக்கு ஆரம்பிக்கலாம் என்று ஒரு யோசனையை அஸ்வின் வழங்கியுள்ளார்.

இந்த கருத்துக்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆதரவு தெரிவித்து பேசியுள்ளார், அவர் கூறுகையில் என்னை பொறுத்தவரை அஸ்வின் யோசனையை நான் ஏற்றுக்கொள்கிறேன் ஒரு போட்டியை இரு அணிகளும் தங்களின் திறமையால் வெல்ல வேண்டும் அதற்கு தடையாக எந்த நிகழ்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.அதுவும் இது உலக கோப்பை தொடர் என்பதால் அதில் எந்த அணிக்கு பாகுபாடு இல்லாமல் இருக்க வேண்டும் என்று கூறினார்.

உலக கோப்பை தொடர் நடத்துவது குறித்து அனைத்து முடிவுகளும் சர்வதேச கிரிக்கெட் அமைப்பை தான் எடுக்க வேண்டும், ஆனால் பல முன்னணி வீரர்கள் மாற்றத்தை எதிர் பார்த்து தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த மாற்றம் உலக கோப்பை தொடரில் நிகழுமா..? என்பதை பொறுத்திருந்து காண்போம்.