IND VS AUS TEST 2023 : இந்திய அணியை தேவையில்லாமல் விமர்சித்த ரவி சாஸ்திரி..!! ரோஹித் சர்மா பதிலடி..!!

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில், 3வது டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவிய இந்திய அணியை கடுமையாக விமர்சித்த ரவி சாஸ்திரிக்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பதிலடி கொடுத்துள்ளார்.
இந்திய அணி பார்டர் கவாஸ்கர் தொடரில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் அசத்தல் வெற்றி பெற்றது, அதன் பின் 3வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் மோசமான தோல்வியை தழுவியது. இந்நிலையில் இந்திய அணி முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற பின் 3வது டெஸ்ட் போட்டியை மிகவும் அலட்சியமாக எதிர்கொண்டு தங்கள் மீது இருந்த மிகுதியான நம்பிக்கையினால் தோல்வியை தழுவியது என்று விமர்சித்தார்.
இந்நிலையில் 4 வது டெஸ்ட் போட்டிக்கு முன்பு பத்திரிகையாளர்களை சந்தித்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவிடம், ரவி சாஸ்திரியின் விமர்சனம் குறித்து கேட்ட பொழுது, வெளியில் இருந்து பேசுபவர்கள் அணியில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் கருத்துகளை பதிவு செய்கிறார்கள் என்று கூறினார், மேலும் நாங்கள் எப்போதும் ஒரு போட்டியை மிகவும் எளிதாக கருத மாட்டோம் இந்திய மண்ணில் டெஸ்ட் தொடர் நடைபெற்றாலும் முழுவீச்சில் வெற்றியை நோக்கி தான் விளையாடுவோம் என்று ரோஹித் சர்மா கூறினார்.
இந்த தொடரில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் வென்றதால் 3வது டெஸ்ட் போட்டியை மிகவும் எளிதாக அதீத நம்பிக்கையோடு கையாளவில்லை, அனைத்து போட்டிகளையும் ஒரே மாதிரி தான் விளையாடுவோம் என்று ரோஹித் சர்மா கூறினார். இந்திய அணியில் முன்பு இருந்த ரவி சாஸ்திரிக்கு அணியில் இருக்கும் வீரர்கள் எப்படி போட்டிக்கு தயாராகுவார்கள் என்ன பேசிக் கொள்வார்கள் என்பது அனைத்தும் நன்றாகவே தெரிந்திருக்கும் பின்பு இப்படி தேவையில்லாத விமர்சனங்களை வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது அதை கொண்டு போய் குப்பையில் போடுங்கள் என்று கூறினார்.
இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் மார்ச் 9 அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த போட்டியில் வெற்றி பெற இந்திய அணி முழுவீச்சில் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.