இந்தியா VS நியூசிலாந்து : சர்வதேச அரங்கில் ரோஹித் சர்மா தனது 42வது சதத்தை பதிவு செய்தார்..! விமர்சனங்களுக்கு பதிலடி..!

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: January 24, 2023 & 15:33 [IST]

Share

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய இறுதி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஆரம்பத்தில் இருந்து அதிரடியை வெளிப்படுத்தினார்கள்.இதில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சதம் அடித்து நீண்ட நாட்களாக தன் மீது எழுந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இந்த 3 வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பௌலிங்கை தேர்வு செய்தது, இந்நிலையில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் அதிரடியான தொடக்கத்தை அளித்தது இருவரும் அரை சதம் கடந்தார்கள். 

அதன்பின் தொடர்ந்து மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச அரங்கில் தனது 30 வது  ஒருநாள் சதத்தை பதிவு செய்தார்,இது சர்வதேச அரங்கில் ரோஹித் சர்மாவின் 42 சதம் ஆகும்.ரோஹித் சர்மா கடைசியாக 2020 ஆம்  ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் ரோஹித் சர்மா 83 பந்துகளில் 6 சிக்ஸர்கள் 9 பவுண்டரிகள் உட்பட சதம் அடித்து நீண்ட நாட்களாக இருந்த காத்திருப்புக்கு விடை கொடுத்தார்.ரோஹித் சர்மா தனது 30 வது ஒருநாள் தொடர் சதத்தின் மூலம் தன் மீது சமீப காலமாக இருந்த அனைத்து விமர்சனங்களுக்கு பதிலளித்தது உள்ளார் என்று ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.