IND VS AUS TEST 2023 : முதல் டெஸ்ட் வெற்றிக்கு விராட் கோலி தான் முக்கிய காரணம் ரோஹித் சர்மா பதிவு..!! ரசிகர்கள் நெகிழ்ச்சி..!!

இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை மூன்றாவது நாள் முடியும் முன்னரே வீழ்த்தி இன்னிங்ஸ் வெற்றி பெற்று அசத்தியது, முதல் டெஸ்ட் போட்டியில் அணியை வெற்றியை நோக்கி வழிநடத்திய கேப்டன் ரோஹித் சர்மா அணியின் அதிரடி வீரர் மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலியிடம் இருந்து அணியை வழிநடத்தும் திறன்கள் மற்றும் யுக்திகளை கற்று கொண்டேன் என்று கூறியுள்ளார்.
இந்திய அணி நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி 132 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று சர்வதேச அரங்கில் ஒரு சம்பவத்தை அரங்கேற்றியது.
இதையடுத்து போட்டியின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சக வீரர் விராட் கோலி கேப்டனாக அணியை வழிநடத்திய தருணங்களில் அவரிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக் கொண்டேன் என்று கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய ரோஹித் சர்மா, இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி இருந்த போது போட்டியில் அணிக்கு ஒரு விக்கெட் கூட கிடைக்காத தருணத்திலும் எதிர் அணியினருக்கு அழுத்தம் தர கோலி தவறியதில்லை.
குறிப்பாக அணியின் பவுலர்களை வைத்து சரியான இடத்தில் பந்து வீச செய்து எதிர் அணியினருக்கு அழுத்தத்தை தருவார். அதன்மூலம் எதிரணியினர் தவறு செய்து தங்கள் விக்கெட்டை இழக்க நேரிடும், இதை தான் இந்த முதல் டெஸ்ட் போட்டியில் நான் செய்தேன் என்று கூறினார்.
இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி இருந்த பொழுது தான் தலைமை தாங்கிய 68 டெஸ்ட் போட்டிகளில் 40 போட்டிகளில் வெற்றி பெற்று தந்தார், குறிப்பாக இந்திய அணியின் வேகப்பந்து பவுலர்களை வைத்து பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உதவியுடன் ஆஸ்திரேலியா அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வெற்றி பெற்ற பெருமை விராட் கோலியை சாரும் என்பது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலி எதிரணியினர் பார்த்து மிரளும் அளவிற்கு அதிரடியான வகையில் இந்திய அணியை வழி நடத்தினார்,மேலும் விராட் கோலி தலைமையில் இந்திய அணியின் டெஸ்ட் அரங்கில் உலகின் நம்பர் 1 அணியாக திகழ்ந்தது.
இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை பெரிய அளவில் வீழ்த்தி வெற்றி பெற்றதற்கு விராட் கோலியிடம் கற்று கொண்ட தலைமை பொறுப்பு திறன்கள் உதவியதாக ரோஹித் சர்மா கூறி அனைவரையும் நெகிழ வைத்தார்.
இந்திய அணியின் வெற்றிக்காக முன்னணி வீரர்கள் அனைவரும் இணைந்து உழைப்பது அணியின் இளம் வீரர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் என்று ரசிகர்கள் பலர் தங்கள் உணர்வுகளை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.