IND VS AUS 2023 TEST : இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்வதில் தொடரும் குழப்பம்..! புதிய வீரருக்கு வாய்ப்பு..??

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நாளை (பிப்ரவரி 9) நடைபெற உள்ள நிலையில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் தொடர்ந்து குழப்பங்கள் நீடித்து வருகிறது.
இந்திய அணி இந்த தொடரை 3-0 என்ற நிலையில் கைப்பற்றினால் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதி போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு உறுதி ஆகும், அதே சமயத்தில் ஆஸ்திரேலியா அணி கடந்த 3 ஆண்டுகளாக இந்த தொடரில் தோல்வியை தழுவிய நிலையில் இந்த முறை இரு அணிகளும் கட்டாய வெற்றி நோக்கி தொடரில் முழுவீச்சில் பங்கேற்க உள்ளார்கள்.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷாப் பந்த் விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வு பெற்று வருகிறார், இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் பந்த் இடத்தில் யாரை விளையாட வைப்பது என்ற குழப்பம் நீடித்து வருகிறது. இந்திய அணியின் விக்கெட் கீப்பர் இடத்தில் இஷான் கிஷான் அல்லது கே.எஸ்.பாரத் இருவரில் கண்டிப்பாக ஒருவர் விளையாட வாய்ப்புள்ளது.
இந்த தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் காயம் காரணமாக விலகியுள்ள ஷ்ரேயஸ் ஐயர் இடத்தில் சுப்மன் கில் அல்லது சூர்யா குமார் யாதவ் இருவரில் யாரை விளையாட வைப்பது என்ற முடிவும் எட்டப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது.இந்த குழப்பங்கள் குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அணியின் பிளேயிங் லெவன் குறித்து உறுதியான முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை என்று கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய ரோஹித் முதல் டெஸ்டில் ஷ்ரேயஸ் ஐயர் இடத்தில் அண்மையில் நடந்த ஒருநாள் தொடர்களில் பல சதங்கள் அடித்து நல்ல பார்மில் இருக்கும் சுப்மன் கில் வாய்ப்பு கொடுப்பதா அல்லது அணியின் அதிரடி வீரர் சூர்யா குமார் யாதவுக்கு தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு அளிக்க படுமா..?? என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று கூறினார்.
இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றும் முனைப்பில் உறுதியாக இருப்பதால், முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெறும் வகையில் சிறந்த பிளேயிங் லெவனை தேர்வு செய்து போட்டியில் அசத்தும் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.