IND VS AUS TEST 2023 : 3வது டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுல் இடம்பெறுவர் ரோஹித் சர்மா உறுதி..!!

இந்திய மண்ணில் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடர் நடைபெற்று வருகிறது, இதில் 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் இடம்பெறுவது குறித்து கேப்டன் ரோஹித் சர்மா முக்கிய கருத்தை பதிவு செய்துள்ளார்.
இந்த தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடிய 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று 2-0 என்ற நிலையில் முன்னிலையில் உள்ளது, அடுத்து நடைபெற உள்ள 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டால் தொடரை கைப்பற்றி விடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் தொடக்க வீரர் இடத்தில் கே.எல்.ராகுலுக்கு பதில் இளம் வீரர் ஷுப்மன் கில் களமிறக்கப்பட்ட வாய்ப்புள்ளது என்று கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது.
இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் சமீப காலமாக மிகவும் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார், தனது மோசமான பார்மில் உள்ளார் என்பதால் பல விபரங்களுக்கு ஆளாகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 3வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பத்திரிக்கையாளர்களை சந்தித்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கே.எல்.ராகுல் அணியில் இடம்பெறுவது குறித்து கருத்தை பதிவு செய்துள்ளார்.
அதாவது கே.எல்.ராகுல் அண்மையில் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பதவியில் இருந்து விலக்கப்பட்டார் எனவே 3வது டெஸ்ட் போட்டியில் ராகுல் இடம் பெறுவாரா..?? என்று எழுந்த கேள்விக்கு, இந்திய அணியை பொறுத்த வரை அனுபவ மற்றும் திறமையான வீரர்களுக்கு மோசமான பார்மில் இருக்கும் பொழுது தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படும், கே.எல்.ராகுல் அணியின் முன்னணி வீரர் என்பதால் அவருக்கு தேவையான வாய்ப்பு கட்டாயம் வழங்கப்படும் என்று ரோஹித் கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய ரோஹித் சர்மா, இந்திய அணியின் துணை கேப்டன் பதவியில் இருந்து விலக்கினால் அணியில் இடம் கிடைக்காது என்று ஒன்றும் இல்லை, இந்திய அணியில் திறமை வாய்ந்த முக்கிய வீரர் ராகுல் எனவே துணை கேப்டன் பதவி இருப்பதும் இல்லாததும் ஒரு முக்கிய விஷயம் இல்லை என்று கூறினார்.ரோஹித் சர்மா உடைய இந்த பதிவின் மூலம் கே.எல்.ராகுலுக்கு 3 வது டெஸ்ட் போட்டியில் கண்டிப்பாக இடம் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.