உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி திட்டம் குறித்து ரோகித் சர்மா கருத்து ..!!

நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதிய டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தோல்வியை தழுவிய நிலையில், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியது. இதையடுத்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இந்திய அணி தயாராகும் திட்டம் குறித்து முக்கிய தகவலை கேப்டன் ரோஹித் சர்மா பகிர்ந்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை 2-1 என்ற நிலையில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியுள்ளது, மேலும் ஒரு மகிழ்ச்சியான நிகழ்வாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குள் தொடர்ந்து 2வது முறையாக முன்னேறியுள்ளது. அடுத்து இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.
அதன்பின் இந்திய அணியின் வீரர்கள் மார்ச் 31 ஆம் தேதி முதல் ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ளனர், இந்த தொடர் மே 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி எப்படி தயாராகும் என்று பல கேள்விகள் எழுந்துள்ளன. அதாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ஜூன் 7ஆம் தேதி முதல் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணி இந்த தொடருக்கு எப்படி தயராகும் என்று எழுந்த கேள்விக்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கூறிய பதில், இந்த ஐபிஎல் தொடரில் மே 21 ஆம் தேதி மொத்தம் 6 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் தொடரில் இருந்து வெளியேறி விடும், அந்த அணிகளில் உள்ள இந்திய வீரர்கள் முன்னதாக லண்டன் சென்று 2 வார பயிற்சி கேம்ப் இணைத்து விடுவார்கள் என்று கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய ரோஹித் டெஸ்ட் அணியின் முக்கிய பவுலர்கள் முகம்மது ஷாமி, முகமது சிராஜ் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் பணி சுமைகள் ஐபிஎல் தொடரில் சரியாக கண்காணிக்க படும், இரு அணிகளில் இடம் பெற்றுள்ள ஒரு சில வீரர்கள் தவிர அனைவரும் இங்கிலாந்து மண்ணில் பல போட்டிகளில் விளையாடியுள்ளார் எனவே அது பெரிய பிரச்சினையாக இருக்காது என்று கூறினார்.
முதன் முறையாக நடை பெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் சாம்பியன் பட்டத்தை இறுதிப்போட்டி வரை சென்ற இந்திய அணி இழந்த நிலையில், இந்த முறை கண்டிப்பாக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் நிபுணர்கள் பெரிதும் எதிர்பார்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.