IND VS AUS TEST 2023 : டான் பிராட்மேன் வழியில் ரோஹித் சர்மா புரிந்த சாதனை..! முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் புகழாரம்..!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் நாக்பூரில் உள்ள விதர்பா மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் பலப்பரீட்சை நடத்தினார்கள், குறிப்பாக இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா அணியை சிறப்பாக வழிநடத்தியது மட்டுமல்லாமல் பேட்டிங்கில் மிக பெரிய சாதனை ஒன்றை புரிந்தார்.
பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் முதல் டெஸ்ட் முதல் நாள் முடிவில் இந்திய அணி மிகவும் வலுவான நிலையில் இருந்தது, அதற்கு முக்கிய காரணம் இந்திய அணியின் பவுலர்கள் தான் என்று கூறினால் மிகையில்லை, இந்திய அணியின் பவுலர்கள் அதிரடி பவுலிங்கை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியா அணியின் வீரர்களை திணறடிதார்கள்.
இந்நிலையில் முதல் நாள் முடியும் முன்பே ஆஸ்திரேலியா அணி வெறும் 177 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது, அடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் நிலையான தொடக்கத்தை அளித்தார்கள், குறிப்பாக அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் கடந்தார்.
இதனை அடுத்து பேசிய ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் தொடக்க வீரர் மார்க் வாக் ரோஹித் சர்மா தனது சிறந்த ஆட்டத்தின் மூலம் ஆஸ்திரேலியா அணியின் வெற்றி கனவை தகர்த்து விட்டார் என்று கூறினார், மேலும் சொந்த மண்ணில் அதிக சராசரி வைத்திருக்கும் வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா இரண்டாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார் என்று கூறினார்.
உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் தான் சொந்த மண்ணில் அதிக சராசரி வைத்திருக்கும் வீரர்களில் முதலிடத்தில் உள்ளார், அதாவது அவரது சராசரி 98.2 ஆகும்.அதன் பின் இந்தியாவின் ரோகித் சர்மா 74.7 சராசரியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி முதல் நாள் முடிவில் 77 ரன்கள் பெற்றிருந்த நிலையில் ரோஹித் சர்மா 9 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உட்பட 56*(69) பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் இந்திய அணி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த போட்டியில் வெற்றிபெற ரோஹித் சர்மா தொடர்ந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.