ind vs aus 2023 : இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முக்கிய சாதனை படைத்தார்..!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடிய 3 ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் முக்கிய சாதனை படைத்து நிலையில் முன்னணி வீரர்கள் பட்டியலில் இணைந்தார்.
இந்திய அணியின் துவக்க வீரர் ரோஹித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு நல்ல தொடக்கத்தை அளித்தார், குறிப்பாக ஆஸ்திரேலியா அணியின் முன்னணி வேகப்பந்து பவுலர் மிச்செல் ஸ்டார்க் பவுலிங்கை சிதறடித்தார். ரோஹித் சர்மா 2 சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகள் உட்பட 30(17) ரன்கள் பெற்று ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் ரோகித் சர்மா பெரிய அளவில் ரன்கள் பெறவில்லை என்றாலும் புதிய மைல்கல்லை அடைந்தார்.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆசியா மண்ணில் 10000 ரன்கள் பெற்ற 8 வது வீரர் என்ற சாதனையை படைத்த நிலையில் முக்கிய வீரர்கள் அடங்கிய பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இதுவரை ரோஹித் சர்மா தனது கிரிக்கெட் பயணத்தில் 17027 ரன்கள் பதிவு செய்துள்ள நிலையில், அதில் 100026 ரன்கள் ஆசியா மண்ணில் நடைபெற்ற போட்டியில் பெறப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சிறப்பு மிகு பட்டியலில் இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஆசியா மண்ணில் 21741 ரன்கள் [பெற்று முதல் இடத்தில் உள்ளார், மேலும் இந்த பட்டியலில் சச்சின் ,கோஹ்லி, ராகுல் டிராவிட், வீரேந்திர சேவாக், எம்எஸ் தோனி, முகமது அசாருதீன், மற்றும் சவுரவ் கங்குலி உள்ள நிலையில் ரோஹித் சர்மா 8 வது வீரராக இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணிக்காக ஆசியா மண்ணில் 247 போட்டிகளில் விளையாடிய ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 44.16 என்ற சிறந்த சராசரியை வைத்துள்ளார், மேலும் 243 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ள ரோஹித் சர்மா 30 சதம் ,48 அரைசதம் உட்பட 10914 ரன்கள் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக பல போட்டிகளில் இருந்துள்ள ரோஹித் சர்மா அடுத்து இந்திய மண்ணில் நடைபெற உள்ள ஒருநாள் உலக கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு வழிவகுப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.