ஜஸ்பிரிட் பும்ரா நிலை குறித்து ரோஹித் கொடுத்த அப்டேட்..! ரசிகர்கள் நம்பிக்கை..!

இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து அசத்தல் வெற்றிகளை பெற்ற வருகிறது, இறுதியாக நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியது.அதை அடித்து பேட்டி அளித்த அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முன்னணி பவுலர் ஜஸ்பிரிட் பும்ரா அணிக்கு திரும்புவதை குறித்த செய்தியை பதிவு செய்தார்.
இந்திய அணியின் முன்னணி பவுலர் ஜஸ்பிரிட் பும்ரா காயம் காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து ஓய்வில் இருக்கிறார், அவர் எப்போது மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என்ற கேள்வி அனைவரின் மனதில் இருந்தது. இதற்கு அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கடந்த ஆண்டு காயம் அடைந்த நிலையில் டி20 உலக கோப்பையில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.இதனால் இந்திய அணியின் பவுலிங் யூனிட் அந்த தொடரில் மிகவும் சிரமப்பட்டது, தற்போது இந்திய அணி ஒருநாள் உலக கோப்பை தொடரை கைப்பற்றும் வகையில் ஒருநாள் தொடரில் கவனத்தை செலுத்தி வருகிறது.
இலங்கைக்கு எதிரான ஒருநாள் இந்திய அணியில் காயத்தில் இருந்து மீண்ட பும்ரா இடம் பெறுவர் என்ற செய்திகள் வெளியானது, ஆனால் பிறகு அந்த தொடரில் இருந்து பும்ரா விலகிவிட்டார் மேலும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகள் வரை அவர் இந்திய அணியில் இடம்பெற மாட்டார் என்று தகவல்கள் வெளியானது.
இது குறித்து விளக்கம் அளித்த அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஜஸ்பிரிட் பும்ரா கண்டிப்பாக விரைவில் இந்திய அணிக்கு திரும்புவார் என்றார், மேலும் காயத்தில் இருந்து பும்ரா இன்னும் முழுமையாக குணமாகாத காரணத்தால் ஓய்வில் இருக்கிறார் என்று ரோஹித் கூறினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் முடிந்த பிறகு இந்திய அணியில் பும்ரா இடம் பெறுவர் என்று ரோஹித் சர்மா கூறினார்.
அதை தொடர்ந்து பேசிய ரோஹித் சர்மா இந்திய அணி அடுத்து முக்கியமான தொடர்களில் பங்கேற்க உள்ளதால் அணியின் முக்கிய பௌலர் ஆனா பும்ரா காயத்தில் முழுமையாக குணமாகமல் இருக்கும் நிலையில் உடனடியாக களத்தில் இறக்கி ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்று கூறினார். இந்நிலையில் இந்திய ரசிகர்கள் விரைவில் ஜஸ்பிரிட் பும்ரா முழுமையாக குணமடைந்து அணியில் இடம் பெறுவார் என்று நம்பிக்கையுடன் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.