டி20 தொடரில் இருந்து நான் விலகவில்லை..! ரோஹித் சர்மா அதிரடி …!

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: [IST]

Share

இந்திய டி20 அணியில் இனி இளம் வீரர்கள் தான் இடம் பெறுவார்கள் என்ற கருத்து பரவியதால் ரோஹித்,கோலி போன்ற முன்னணி வீரர்கள் இந்திய டி20 அணியில் இனி விளையாட மாட்டார்கள் என்ற செய்திக்கு ரோஹித் சர்மா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இந்திய அணி இலங்கை எதிரான டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் சிறப்பாக விளையாடி தொடரை 2-1 நிலையில் கைப்பற்றியது.மேலும் இளம் வீரர்களை கொண்ட புதிய  டி20 அணியை உருவாக்கி  முழு நேர கேப்டனாக ஹர்திக் பாண்டியா தான் தொடர்ந்து செயல்படுவார் என்ற செய்திகள் இணையத்தில் பரவி வந்தது.

இதனால் இந்திய டி20 அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, முகம்மது ஷாமி போன்ற அனுபவ வீரர்கள் விளையாட மாட்டார்கள் என்று கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்பட்டது.இது குறித்து ரோகித் சர்மாவிடம் கேட்ட பொழுது,  எந்த ஒரு பிளேயராலும் தொடர்ந்து அனைத்து போட்டிகளிலும்  விளையாட முடியாது அனைவருக்கும் குறிப்பிட்ட ஓய்வு தேவை இதனை நான் முழுமையாக நம்புகிறேன்.

அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிராக  டி20 தொடர், ஐபிஎல் தொடர் என வரிசையாக டி20 தொடர்கள் வர உள்ளது.அதற்கு பிறகு பார்க்கலாம்  என்ன நடக்கும் என்று ,ஆனால் இதுவரை நான் டி20 தொடரில் இருந்து விலகுவதை  பற்றி யோசிக்கவில்லை கண்டிப்பாக தொடர்வேன் என்று கூறினார்.  

இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் இலங்கை அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது,இந்த ஆண்டு இறுதியில் இந்திய மண்ணில் நடைபெற உள்ள உலக கோப்பை தொடர் தான் முக்கியம் என்பதால் முன்னணி வீரர்கள் அனைவரும் ஒருநாள் தொடரில் தான் முழுமையாக கவனம் செலுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.