தல தோனியின் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா..! புதிய சிக்சர் மன்னன் ஆனார்..!

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: January 19, 2023 & 10:32 [IST]

Share

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள் ஹைதெராபாத்தில்  மோதிய முதல் ஒருநாள் போட்டியில் பல அதிரடிகள் அரங்கேறியது, அதேபோல் பல முன்னணி வீரர்களின்  சாதனைகள் முறியடிக்க பட்டது. இந்த வரிசையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித்  முன்னாள் கேப்டன் தோனியின் சாதனை ஒன்றை முறியடித்துள்ளார்.

இந்திய அணி இலங்கைக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியதன் மூலம் ஒருநாள்  தொடரை முழுமையாக கைப்பற்றியது, அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்றது இதில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில்  அதிரடி நிலவிய நிலையில் போட்டி மிகவும் சுவாரசியமாக இறுதி வரை சென்றது.

நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.இந்த போட்டியில் ரோஹித் 34(38) ரன்கள் அடித்தார் அதில் 2 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் அடங்கும். 

இந்த போட்டியில் ரோஹித் சர்மா 2 சிக்சர்கள் அடித்ததன் மூலம் இந்திய மண்ணில் ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார், இதற்கு முன்னர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி ஒருநாள் போட்டிகளில் 123 சிக்சர்கள் அடித்து முதல் இடத்தில் இருந்தார்.

தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இரண்டு சிக்சர்கள் அடித்ததன் மூலம் இந்திய மண்ணில் ஒருநாள் போட்டிகளில் 125 சிக்சர்கள் பதிவு செய்து முதல் இடத்திற்கு சென்றார் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, மேலும் ஒருநாள் அரங்கில் 100 சிக்சர்களுக்கு மேல் அடித்த இரண்டு இந்திய வீரர்கள் இவர்கள் இருவரும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் வீரர்கள் தொடர்ந்து ஒரு நாள் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், உலக கோப்பையை கைப்பற்றுவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் தெரிவதாக இந்திய ரசிகர்கள் தங்கள் நம்பிக்கையை தெரிவித்து இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.