IND VS AUS TEST 2023 : மூன்று வடிவ தொடர்களிலும் சதம் அடித்த முதல் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா..!! ரசிகர்கள் புகழாரம்..!!
![IND VS AUS TEST 2023 : மூன்று வடிவ தொடர்களிலும் சதம் அடித்த முதல் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா..!! ரசிகர்கள் புகழாரம்..!!](https://www.sportspartans.com/assets/uploads/news-1707.jpg)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதி வரும் முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா புதிய சாதனை படைத்து அசத்தியுள்ளார், முதல் இந்தியராக சர்வதேச அளவில் சாதனை படைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்திய அணி முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணியை 177 ரன்களில் ஆல் அவுட் செய்து, பேட்டிங்கில் களமிறங்கி ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் பெற்றிருந்தது. இந்திய கேப்டன் ரோஹித் சர்மா அரைசதம் அடித்து ஆட்டமிழக்காமல் சிறப்பாக விளையாடி வந்தார்.
இந்நிலையில் இரண்டாவது நாள் தொடக்கத்தில் சிறப்பாக பந்து வீசிய ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய அணி வீரர்களை திணறச் செய்து விக்கெட்டுகளை கைப்பற்றினர், மறுமுனையில் நிதானமாக பொறுப்புடன் விளையாடி வந்த ரோஹித் சர்மா சதம் அடித்து அசத்தினார்.
இது ரோஹித் சர்மாவின் 9 வது சர்வதேச சதம் மற்றும் இந்திய அணியின் தொடக்க வீரராக 38 வது என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் இந்த சதம் மூலம் மூன்று வடிவ தொடர்களிலும் சதம் அடித்த முதல் இந்திய அணியின் கேப்டன் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்தார்.இதற்கு முன்னர் இந்த சாதனையை பட்டியலில் பாபர் அசாம், பாப் டு பிளெசிஸ் மற்றும் திலகரத்னே தில்ஷன் ஆகியோர் இடம் பெற்றிருந்த நிலையில் ரோஹித் சர்மாவும் இணைந்தார்.
இந்திய அணிக்காக தனி ஒருவனாக சிறப்பாக விளையாடி வந்த ரோஹித் சர்மா 15 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் உட்பட 120(212) ரன்கள் எடுத்த நிலையில் பேட் கம்மின்ஸ் பவுலிங்கில் ஆட்டமிழந்தார். இந்திய அணியின் கேப்டனாக புதிய மைல்கல்லை அடைந்த ரோஹித் சர்மாவை ரசிகர்கள் இணையத்தில் பாராட்டி வருகிறார்கள். மேலும் தற்போதைய நிலையில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் பதிவு செய்து 59 ரன்கள் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.