ஐபிஎல் 2023: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு புதிய கேப்டன் மற்றும் புதிய விக்கெட் கீப்பர் இவர்களா .?? ரசிகர்கள் மகிழ்ச்சி…!

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: January 05, 2023 & 16:07 [IST]

Share

இந்திய அணியின் இளம் முன்னணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக திகழ்ந்த ரிஷாப் பந்த் அண்மையில் நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவே அவருக்கு பதிலாக டெல்லி அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க முடிவாகியுள்ளது.

ரிஷாப் பந்த் சில நாட்களாக டெஸ்ட் தொடரை தவிர பிற தொடர்களில்  சரியான பங்களிப்பை அளிக்காததால், இலங்கைக்கு எதிரான தொடரில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட வில்லை எனவே ஓய்வில் இருந்த பந்த் தனது தாயை சந்திக்க டெல்லி- டேராடூன் சாலையில் தனது காரில் சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன்பின் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் காலில் உள்ள தசை நார்கள்,முகம் மற்றும் உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது என்றார்கள்,எனவே பந்த் முழுமையாக குணமாக 4-6 மாதங்கள் ஆகும் என்று கூறினார்கள். 

இந்நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த பந்த் வரும் ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ள வாய்ப்பில்லாததால்,புதிய கேப்டனை நியமிக்க டெல்லி அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.டெல்லி அணியில் இடம்பெற்றுள்ள டேவிட் வார்னர் மற்றும் பிரிதிவ் ஷா இருவரின் பெயர்கள் இந்த கேப்டன் பதவியில் நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

டேவிட் வார்னர் தற்போது ஆஸ்திரேலிய அணிக்காக நல்ல பார்மில் விளையாடிக் கொண்டிருக்கிறார்,மேலும் ஐபிஎல் தொடரில் கேப்டனாகவும் இருந்துள்ளார் எனவே அவர் தான் டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று கிரிக்கெட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

டெல்லி அணியின் விக்கெட் கீப்பராக சர்பராஸ் கானை நியமிக்கவும் வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது,ஆனால் டெல்லி அணி சார்பில் எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை எனவே பொறுத்திருந்து அறிந்து கொள்வோம்.