ரிஷாப் பந்த் உடல்நிலை குறித்து புதிய அறிவிப்பு.?? உலக கோப்பை தொடரில் பங்கேற்க முடியாத நிலை..??

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: January 06, 2023 & 11:35 [IST]

Share

மும்பையில் உள்ள  கோகிலாபென் மருத்துவமனை தற்போது சிகிச்சை பெற்று வரும் ரிஷாப் பந்த் உடல்நிலை குறித்து புதிய செய்தி கிரிக்கெட் வட்டாரங்களில் வெளியானது,இதனை அறிந்த கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில் உள்ளார்கள்.

இந்திய அணியின் முக்கிய வீரராக திகழ்ந்த ரிஷாப் பந்த் அண்மையில் ஏற்பட்ட கார் விபத்தில் பலத்த காயம் அடைந்து டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் ,அதன்பின் உடல் தசை நார்களில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு பிசிசிஐயின் மேற்பார்வையில் அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு சென்ற ரிஷாப் பந்த் கோகிலாபென் மருத்துவமனையில் விளையாட்டு எலும்பியல் இயக்குனர் டாக்டர் டின்ஷா பர்திவாலா மேற்பார்வையில் முழுமையாக பரிசோதிக்கப்பட்ட பின் அவரின் உடல்நிலை குறித்து தகவல்கள் இணையத்தில் வெளியாகி பரவி வருகிறது. அதில் பந்த் உடலில் காயம் காரணமாக உள்ள வீக்கங்கள் முழுமையாக குறைந்த பிறகு தான் அவருக்கு அடுத்த கட்ட சிகிச்சை அளிக்க முடியும் என்று கூறியுள்ளார்.  

மேலும் பந்த் உடலில் தசை நார்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அது முழுவதும் குணமாகி அவர் பழைய நிலைக்கு திரும்ப கண்டிப்பாக 8-9 மாதங்கள் ஆகும் என்றும் தெரிவித்துள்ளார்,இந்நிலையில் அவர் இந்த ஆண்டு நடக்கும் ஐபிஎல், ஆசிய கோப்பை, ஒருநாள் உலக கோப்பை என அணைத்து தொடர்களிலும் பங்கேற்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் பந்த் கலந்து கொள்ள முடியாத நிலை இந்திய அணிக்கு பெரிய இழப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்,ஆனால் இந்த செய்தி குறித்து பிசிசிஐ நிர்வாகம் எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும்  வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.