ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை தொடர்களில் ரிஷப் பந்த் பங்கேற்க மாட்டார்..!! தகவல் வெளியானது..??? | rishabh pant likely to skip world cup

இந்திய அணியின் முன்னணி வீரர் மற்றும் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஐபிஎல் தொடரை அடுத்து இந்த 2023 வருடத்தில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை தொடர்களில் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கிய இந்திய அணியின் இளம் அதிரடி வீரர் ரிஷப் பந்த் படுகாயம் அடைந்த நிலையில், பல நாட்கள் சிகிச்சைக்கு பின் படிப்படியாக உடல் நிலை தேறி குணமாகி வருகிறார். மேலும் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் டெல்லி சாப்பிடல்ஸ் அணியை உற்சாகப்படுத்தும் வகையில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்திற்கு வந்திருந்தார்.
இதனை அடுத்து ரிஷப் பந்த் உடல்நிலை முன்னேற்றம் குறித்து எழுந்த கேள்விகளுக்கு, தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதாவது காயத்தில் இருந்து மிகவும் பொறுமையாக குணமாகி வரும் பந்த், இந்த 2023 ஆம் ஆண்டு இறுதியில் செப்டம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை மற்றும் அக்டோபர் மாதத்தில் தொடங்க உள்ள ஒருநாள் உலக கோப்பை தொடர் என இரண்டிலும் பங்கேற்க மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணி ரிஷப் பந்த் போல் ஒரு அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறது, இந்நிலையில் அடுத்து வரும் முக்கிய தொடர்களிலும் பந்த் பங்கேற்க மாட்டார் என்ற செய்தி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயத்தில் எதிர்பாராத விதமாக காயம் ஏற்பட்டு குணமாகி வரும் பந்த் விரைவில் முழு உடல் தகுதியை அடைந்து இந்திய அணியில் இணைய வேண்டும் என்று ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.