ஐபிஎல் 2023 : டெல்லி அணியின் முக்கிய வீரராக அக்சர் படேல் விளங்குவார்..!! ரிக்கி பாண்டிங் கருத்து..!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடிய டெஸ்ட் தொடரில் சிறப்பாக பேட்டிங் அசத்திய ஆல்ரவுண்டர் அக்சர் படேல் குறித்து பேசிய, டெல்லி கேபிடல்ஸ் அணி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் இந்த ஆண்டு நடைபெற உள்ள தொடரில் டெல்லி அணியின் முக்கிய வீரராக அக்சர் படேல் திகழ்வார் என்று கூறினார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி சார்பில் 3 அரைசதங்கள் உட்பட 264 ரன்கள் குவித்து ஆல்ரவுண்டர் அக்சர் படேல் அசத்தினார், இந்த தொடரில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் பெற்ற வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தை பிடித்து உள்ளார்.
இந்நிலையில் அக்சர் படேல் குறித்து பேசிய ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் கூறியது, அக்சர் படேல் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்பது பல வருடங்களுக்கு முன் ஐபிஎல் தொடரில் இருந்து எனக்கு தெரியும் என்று கூறினார், அதன்பின் 2019 ஆம் ஆண்டு முதல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளராக பாண்டிங் நியமிக்கப்பட்ட உடன் அக்சர் படேல் பேட்டிங் முறையில் சில மாற்றங்களை செய்து உதவினோம் என்று கூறினார்.
மேலும் ரிக்கி பாண்டிங் கூறுகையில் அக்சர் படேல் இந்த முறை டெல்லி அணிக்காக முக்கிய வீரராக திகழ்வார் என்பதை போல், இதன்மூலம் வரும் ஐபிஎல் தொடரில் அக்சர் படேல் பேட்டிங்கில் முன்னதாக இறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. டெல்லி அணியின் கேப்டன் ரிஷாப் பந்த் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில் பேட்டிங்கில் அக்சர் படேல் அணிக்கு மிகவும் உதவுவார் என்பது ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த 2023 ஐபிஎல் தொடரில் ஏப்ரல் 1ஆம் தேதி டெல்லி கேப்பிடல்ஸ் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியுடன் லக்னோவில் பலப்பரிச்சை மேற்கொள்ள உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஐபிஎல் தொடரை எதிர்நோக்கி மிகவும் காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.