IND VS AUS TEST 2023 : 4வது டெஸ்ட் போட்டியின் பிளேயிங் லெவன் பற்றி ரோஹித் சர்மாவுக்கு பாண்டிங் ஆலோசனை..!!

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில், 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளையிங் லெவனை தேர்வு செய்வதில் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஆஸ்திரேலியா அணியின் லெஜெண்ட் ரிக்கி பாண்டிங் முக்கிய ஆலோசனை வழங்கியுள்ளார்.
பார்டர் கவாஸ்கர் தொடரில் முதல் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், அடுத்து நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. அதே சமயத்தில் இந்திய அணியை பொறுத்தவரை அடுத்து நடைபெற உள்ள 4 வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் நிலையில் உள்ளது.
இந்நிலையில் அடுத்து நடைபெற உள்ள இறுதி டெஸ்ட் போட்டியில் கட்டாய வெற்றியை இந்திய அணி களமிறங்க உள்ளது, மேலும் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் தொடர்ந்து சொதப்பி வருவதால் அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்வதில் கேப்டன் ரோஹித் சர்மா குழப்பத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது முதல் 2 டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் ரன்கள் ஏதும் எடுக்காத நிலையில் சுப்மன் கில் லுக்கு 3 வது டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் எதிர்பார்த்த அளவில் 3 வது டெஸ்ட் போட்டியில் ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை, எனவே கடைசி டெஸ்ட் போட்டியில் இருவரில் யாரை களமிறங்குவது என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் லெஜெண்ட் ரிக்கி பாண்டிங் முக்கிய ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதாவது சுப்மன் கில் மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் அணியில் இடம்பெற வேண்டும் என்று கூறினார், கே.எல்.ராகுல் அணியின் மிடில் ஆர்டரிலும் சுப்மன் கில் தொடக்க வீரராகவும் விளையாட வேண்டும் என்று கூறினார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்து மண்ணில் நடப்பதால், இங்கிலாந்தில் பந்து நன்றாக ஸ்விங் ஆகும் என்பதால் ராகுல் முக்கிய வீரராக செயல்படுவர் மேலும் அங்கு சிறந்த ரெக்கார்டுகளை வைத்துள்ள கே.எல்.ராகுல் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதில் கட்டாயம் அணியில் இடம்பெற வேண்டும். மேலும் சுப்மன் கில் போட்டியின் போக்கிற்கு ஏற்றார் போல் விளையாடும் திறன் வாய்ந்த வீரர் என்பதால் அணியில் கில் இடம்பெற வேண்டும் என்று ரிக்கி பாண்டிங் கூறினார்.
இந்திய அணி கட்டாயம் 4வது டெஸ்ட் போட்டியில் வென்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன் பலப்பரீட்சை மேற்கொள்ளும் என்று எதிர்பார்ப்பதாக கூறினார், இந்நிலையில் இந்திய அணி எப்படி 4வது டெஸ்ட் போட்டியை எதிர்கொண்டு வெற்றி பெரும் என்பதை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.