IND VS AUS TEST 2023 : டேவிட் வார்னர் முன்பே ஓய்வு பெற்றிருக்கலாம் ரிக்கி பாண்டிங் அதிரடி .!!

ஆஸ்திரேலியா அணியின் அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னர் ஓய்வு பெறுவது குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் சமீபத்தில் பேசிய பதிவு கிரிக்கெட் வட்டாரங்களில் சர்ச்சைக்குரிய விதத்தில் மிகவும் பேசப்பட்டு வருகிறது.
டெஸ்ட் தொடர்களில் மிகவும் முக்கிய தொடராக சமீப காலத்தில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் தொடர் உள்ளது, இந்த ஆண்டு நடைபெற்று வரும் தொடரில் தற்போதைய நிலையில் 2-1 என்ற நிலையில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது மேலும் இந்த தொடரின் இறுதிப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமையும் விதத்தில் இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் போட்டியை காண மிகுந்த ஆர்வத்தில் உள்ளார்கள்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரராக விளங்கும் டேவிட் வார்னர் சமீப காலமாக தனது மோசமான பார்மில் உள்ளதால் பல விமர்சனங்களுக்கு ஆளாகி வந்தார், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆஸ்திரேலிய மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து அசத்தி தனது விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.
இந்த போட்டி வார்னர் உடைய 100 வது டெஸ்ட் போட்டியாக அமைந்த காரணத்தால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தார். இதையடுத்து தற்போது நடைபெற்று வரும் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் வார்னர் அசத்துவார் என்று எதிர்பார்த்த நிலையில் மீண்டும் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஏமாற்றம் அளித்தார். அதன்பின் காயம் ஏற்பட்டு டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் வார்னர் குறித்து பேசிய பதிவில், வார்னர் முன்பே ஓய்வு பெற்றிருந்தால் சிறப்பாக அமைத்திருக்கும் என்று கூறினார். அதாவது தற்போதைய நிலையில் ரன்கள் அடிக்க தடுமாறி வரும் வார்னர் சமீபத்தில் ஆஸ்திரேலிய மண்ணில் இரட்டை சதம் அடித்த போது டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வு பெற்றிருக்கலாம் என்று பாண்டிங் கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய பாண்டிங், ஒரு பேட்ஸ்மேன் தன்னால் ரன்கள் அடிக்க முடியாத போது அணியின் நிலையை கருத்தில் கொண்டு தாமாகவே ஓய்வு பெற வேண்டும், தற்போது வார்னர் 36 வயதில் மோசமான பார்மில் உள்ளதால் விரைவாக ஓய்வு பெறுவது நல்லது என்று கூறினார்.
அடுத்து ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஆஷஸ் தொடர்களில் பங்கேற்க உள்ள நிலையில் வார்னர் அணியில் இடம் பெற்றாலும் தொடரின் பாதியில் அணியில் இருந்து வெளியேறும் நிலை வரலாம், அந்த நிலை வார்னர் உடைய கிரிக்கெட் பயணத்தில் சிறந்த ஒன்றாக இருக்காது என்று கூறினார்.
இறுதியாக வார்னர் உடைய கிரிக்கெட் பயணம் இன்னும் முடியவில்லை அடுத்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஆஷஸ் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்றால் அவரது கிரிக்கெட் பயணம் எப்படி இருக்கும் என்று தெரியும் என்று பாண்டிங் கூறினார்.