விஜய் குமாரின் வேகப்பந்து வீச்சு...டெல்லி அணி படுதோல்வி! | RCB vc DC IPL 2023 Match Highlights

ஐபிஎல் 2023 தொடரின் 20வது லீக் போட்டி ராயல் சேலன்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் இடையே நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பௌலிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி மிகவும் சாதுர்யமாக விளையாடி 174/6 என்று ஆட்டத்தை நிறைவு செய்தது. அதனை தொடர்ந்து விளையாட வரும் டெல்லி அணி 175 என்ற இலக்கை அடைய வெறித்தனமாக களமிறங்கியது.
அணியின் கேப்டன் டேவிட் வார்னர் நல்ல தொடக்கத்தை முன் வைத்தார். ஆனால் துரதிஷ்ட வசமாக விஜய் குமாரின் பந்து வீச்சில் மண்ணை கௌவி விட்டார். அவரைத் தொடர்ந்து அடுத்தடுத்து வீரர்கள் அவுட் ஆகி விட்டனர். இதனால் டெல்லி அணி போட்டியில் வெற்றி பெறுவதற்கான பாதி வாய்ப்பை இழந்து விட்டது. அணி துவண்டு இருக்கும் நிலையில் மணீஷ் பாண்டே அவர்கள் கலக்கலாக விளையாட ஆரம்பித்தார்.
சுமார் 50 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பாதைக்கு கொண்டு செல்லும் நேரத்தில் பௌல்ட் ஆகி போட்டியை விட்டு வெளியேறினார். அவரை தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் வந்த வேகத்திலையே அவுட் ஆகிவிட்டனர். 16 ஓவர் முடிவில் டெல்லி அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்து. என்ன தான் வெற்றி பெரும் வாய்ப்பு குறைவாக இருந்தாலும் இறுதி வரை போராடினர் டெல்லி அணியின் வீரர்கள்.
கடைசி ஓவர் நெருங்கும் போது அன்ரிச் நார்ட்ஜே இரண்டு பௌண்டரிகளை அடித்து அசத்தினார். இதனால் அடுத்தடுத்து விறுவிறுப்பான சூழல் நிலவியது. இறுதி ஓவரில் 5 பந்துகளில் 32 ரன்கள் எடுக்க வேண்டும். பெங்களூரின் பந்து வீச்சில் இறுதி ஓவரில் ரன் எடுக்க டெல்லி அணி பெரும் போராட்டத்தை சந்தித்தது. கடைசியாக 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.