பெங்களூர் vs ராஜஸ்தான் அணிகள் இடையிலான போட்டி குறித்த முழு விவரங்கள் ஒரு பார்வை..!! | rcb vs rr 2023 ipl match preview

ஐபிஎல் 2023 அரங்கில் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அந்த வரிசையில் அடுத்தாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளார்கள். இந்த மிரட்டல் போட்டிக்கான பிளேயிங் லெவன், பிட்ச் அறிக்கை, ட்ரீம் லெவன் டீம் கணிப்பு மற்றும் வெற்றி கணிப்பு உள்ளிட்ட விவரங்களை பற்றி பார்ப்போம்.
இந்த தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பங்கேற்ற 6 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்துள்ளது, அதே சமயத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பங்கேற்ற 6 போட்டிகளில் 4 வெற்றிகளைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற மிரட்டல் பார்மில் இருக்கும் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையில் அதிரடி ஆட்டம் அரங்கேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டி குறித்த விவரம் :
32 வது லீக் போட்டி : டெல்லி கேபிடல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
நேரம் & நாள் : 3:30 p.m & ஞாயிற்றுக்கிழமை
தேதி : 23 ஏப்ரல் 2023
மைதானம் : எம்.சின்னசாமி மைதானம், பெங்களூரு.
ஒளிபரப்பு தளம் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் & ஜியோ சினிமா.
ட்ரீம் லெவன் டீம் கணிப்பு :
கேப்டன் - விராட் கோலி
துணை கேப்டன் - ஜோஸ் பட்லர்
பேட்ஸ்மேன்கள் - பாப் டு பிளெஸிஸ், கிளென் மேக்ஸ்வெல்
விக்கெட் கீப்பர் - சஞ்சு சாம்சன்
ஆல்-ரவுண்டர்கள் - ஜேசன் ஹோல்டர், ஷாபாஸ் அகமது
பந்துவீச்சாளர்கள் - ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது சிராஜ், ட்ரெண்ட் போல்ட்,வனிந்து ஹசரங்க.
பிட்ச் அறிக்கை :
இந்த போட்டி நடைபெற உள்ள சின்னசாமி மைதானத்தில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்ற அணிகள் சார்பில் அதிரடி ஆட்டம் அரங்கேறி ரன் மழை பொழிந்தது என்று கூறினால் மிகையில்லை. இந்நிலையில் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதும் போட்டியில் பேட்ஸ்மேன்கள் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் இந்த போட்டி மதியத்தில் நடைபெற உள்ளதால் பிட்ச் மிகவும் ஸ்லோவாக இருக்கும் என்பதால் ஸ்பின்னர்கள் சிறந்த பவுலிங்கை வெளிப்படுத்த வாய்ப்புள்ளது.
வெற்றி கணிப்பு :
ஐபிஎல் 2023 தொடரில் கேப்டன் பாப் டு பிளசிஸ் தலைமையில் விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் முன்னணி வீரர்கள் அடங்கிய மிரட்டல் அணியாக உள்ளது. அதே போல் கேப்டன் சஞ்சு சாம்சன் தலைமையில் விளையாடி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் தொடர்ச்சியாக அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை பெற்று முன்னணி அணியாக வலம் வருகிறது.
இந்நிலையில் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள போட்டியில் வெற்றி பெற இரு அணிகள் சார்பில் அதிரடியான ஆட்டம் அரங்கேறும் என்பதில் ஐயமில்லை, எனவே இந்த போட்டியில் வெற்றி வாய்ப்பு இரு அணிகளும் சம அளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பிளேயிங் லெவன் (தோராயமான ): விராட் கோலி , ஃபாஃப் டு பிளெசிஸ்(கேப்டன்), மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (வி.கீ), வனிந்து ஹசரங்கா, சுயாஷ் பிரபு தேசாய், ஹர்ஷல் பட்டேல், வெய்ன் பார்னெல், முகமது சிராஜ்.
ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேயிங் லெவன் (தோராயமான) : ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன்(கேப்டன்/வி.கீ), ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மையர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், டிரென்ட் போல்ட், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்.