ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs மும்பை இந்தியன்ஸ் போட்டி குறித்த முன்னோட்டம்.!! | mi vs rcb 2023 match
![ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs மும்பை இந்தியன்ஸ் போட்டி குறித்த முன்னோட்டம்.!! | mi vs rcb 2023 match](https://www.sportspartans.com/assets/uploads/news-2005.jpg)
ஐபிஎல் 2023 ஆம் தொடர் போட்டிகளில் அணிகள் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், அந்த வரிசையில் அடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளார்கள். இந்த போட்டியின் பிளேயிங் லெவன், பிட்ச் அறிக்கை மற்றும் வெற்றி கணிப்பு உள்ளிட்டவற்றை காண்போம்.
போட்டி குறித்த விவரங்கள் :
5 வது லீக் போட்டி : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs மும்பை இந்தியன்ஸ்
நேரம் & நாள் : 7:30 p.m & ஞாயிற்றுக்கிழமை.
தேதி : 2 ஏப்ரல் 2023
மைதானம் : எம் சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூர்.
ஒளிபரப்பு தளம் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் & ஜியோ சினிமா.
வெற்றி கணிப்பு :
ஐபிஎல் தொடரில் மிரட்டல் அணிகளாக விளங்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் 5 வது லீக் போட்டியில் விளையாட உள்ளார்கள். பெங்களூரு அணியை பொறுத்தவரை கேப்டன் டு கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது, எனவே இந்த ஆண்டும் அதேபோல் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முழு வீச்சில் வெற்றிகளை பெற முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயத்தில் ஐபிஎல் தொடரின் நாயகனாக அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை இந்த ஐபிஎல் தொடரில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று தெளிவாக தெரிகிறது.
இந்நிலையில் போட்டி பெங்களூரு மைதானத்தில் நடைபெற உள்ளதால் வெற்றி வாய்ப்பு மும்பை இந்தியன்ஸ் அணியை விட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிட்ச் அறிக்கை :
இந்த போட்டி நடைபெற உள்ள பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானம் அதிரடி ஆட்டத்துக்கு பேர் போன மைதானம் என்று கூறினால் மிகையில்லை, இங்கு மிரட்டல் பேட்டிங்கை இரு அணிகளும் வெளிப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தியாவில் உள்ள மைதானங்களில் அதிக ரன்கள் பதிவாகும் முக்கிய மைதானமாக சின்னசாமி மைதானம் உள்ளது. இந்த பிட்சில் சராசரி ஸ்கோர் 170 ஆக பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரீம் லெவன் டீம் கணிப்பு :
கேப்டன் : ஃபாஃப் டு பிளெசிஸ்
துணை கேப்டன் : சூர்யா குமார் யாதவ்
பேட்ஸ்மேன்கள் : விராட் கோலி, திலக் வர்மா, இஷான் கிஷான்
ஆல்ரவுண்டர்கள் :கேமரூன் கிரீன், மைக்கேல் பிரேஸ்வெல்
விக்கெட் கீப்பர் : தினேஷ் கார்த்திக்
பவுலர்கள் : முகமது சிராஜ் , ஜோப்ரா ஆர்ச்சர், குமார் கார்த்திகேயா.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பிளேயிங் லெவன் (தோராயமான) : ஃபாஃப் டூ பிளெசிஸ்(கேப்டன்), அனுஜ் ராவத் விராட் கோலி, மஹிபால் லோ மோர், மைக்கேல் பிரேஸ்வெல், தினேஷ் கார்த்திக்(வி.கீ), ஷாபாஸ் அகமது, டேவிட் வில்லி, ஆகாஷ் தீப், சிராஜ், ரீஸ் டாப்லி.
மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் லெவன் (தோராயமான) : ரோஹித் சர்மா(கேப்டன்), இஷான் கிஷன்(வி.கீ), திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், கேமரூன் கிரீன், டிம் டேவிட், ஹிருத்திக் ஷோக்கீன், ஜோஃப்ரா ஆர்ச்சர், குமார் கார்த்திகேயா, அர்ஷத் கான், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்.