ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs மும்பை இந்தியன்ஸ் போட்டிக்கான டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் வெளியானது..!! | IPL Mi vs Rcb 2023 Match
![ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs மும்பை இந்தியன்ஸ் போட்டிக்கான டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் வெளியானது..!! | IPL Mi vs Rcb 2023 Match](https://www.sportspartans.com/assets/uploads/news-2008.jpg)
ஐபிஎல் அரங்கில் அடுத்த அதிரடியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையில் சின்னசாமி மைதானத்தில் போட்டி நடைபெற உள்ளது.இந்த ஐபிஎல் 2023 ஆம் தொடரின் 6 வது லீக் போட்டிக்கான டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் குறித்த தகவல்கள் வெளியானது.
இந்திய மண்ணில் மிகவும் மிரட்டலாக நடைபெற்று வரும் 16 வது ஐபிஎல் தொடரில், அடுத்த வரிசையில் பாப் டு பிளெசிஸ் தலைமையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மற்றும் ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளார்கள். பெங்களூரு அணியை பொறுத்தவரை கடந்த 2022 ஐபிஎல் தொடரில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி பிலே ஆப் சுற்று வரை முன்னேறி அசத்தியது, எனவே இந்த 2023 ஆம் ஆண்டையும் வெற்றியுடன் தொடங்க முழுவீச்சில் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்று மிரட்டல் அணியாக வலம் வருகிறது, ஆனால் கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் மிகவும் மோசமான தோல்வியை தழுவி வெளியேறியது.இதனால் இந்த 2023 ஆம் ஆண்டு தொடரை வெற்றியுடன் தொடங்க முயற்சிப்பார்கள் என்று தெரிய வந்துள்ளது.
இந்த 5 வது லீக் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டு பிளெசிஸ் பவுலிங் தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்ய ரோஹித் தலைமையில் மும்பை அணி களமிறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் அரங்கில் அடுத்த அதிக ரன்கள் பதிவாக உள்ள அதிரடி போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பிளேயிங் லெவன் : விராட் கோலி, ஃபாஃப் டூ பிளெசிஸ்(கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல், மைக்கேல் பிரேஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக்(வி.கீ), கர்ண் சர்மா, ஹர்ஷல் பட்டேல், ஆகாஷ் தீப், ரீஸ் டாப்லி, முகமது சிராஜ்.
மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் லெவன் : ரோஹித் சர்மா(கேப்டன்), இஷான் கிஷன்(வி.கீ ), சூர்யகுமார் யாதவ், கேமரூன் கிரீன், திலக் வர்மா, டிம் டேவிட், நெஹால் வதேரா, ஹிருத்திக் ஷோக்கீன், பியூஷ் சாவ்லா, ஜோப்ரா ஆர்ச்சர், அர்ஷத் கான்.