ஐபிஎல் 2023 தொடரில் லக்னோ அணியின் தொடர் வெற்றியை பறிக்குமா ..?? பெங்களூர் அணி .!! | Rcb vs Lsg Match IPL 2023

ஐபிஎல் 2023 தொடரில் இன்று 15 வது லீக் போட்டியில் பாப் டு ப்ளேசிஸ் தலைமையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கே எல் ராகுல் தலைமையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோத உள்ளார்கள், இந்த போட்டியில் லக்னோ அணியின் வெற்றி பயணத்திற்கு முடிவு கட்டுமா..?? பெங்களூர் அணி என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முன்னணி வீரர்கள் விராட் கோலி, பாப் டு ப்ளேசிஸ் உள்ளிட்டோர் மிரட்டல் பார்மில் உள்ளார்கள், குறிப்பாக அணியில் இணைந்துள்ள பவுலிங் ஆல்ரவுண்டர் டேவிட் வில்லி அசத்தல் பவுலிங் வெளிப்படுத்தி அணிக்கு பலம் சேர்க்கிறார். அதே போல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கடைசியாக நடைபெற்ற 2 போட்டிகளில் அதிரடி வெற்றி பெற்று அசத்தியுள்ளனர், குறிப்பாக அணியும் வெற்றிக்கு முக்கிய காரணமாக மிரட்டல் பார்மில் உள்ள ஆல்ரவுண்டர் கையில் மேயர்ஸ் உடைய அசத்தல் ஆட்டம் உள்ளது.
லக்னோ கடைசியாக நடைபெற்ற ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற முன்னணி ஆல்ரவுண்டர் க்ருனால் பாண்டியா முக்கிய பங்காற்றினார், மேலும் சிறந்த பவுலிங் யூனிட்டை கொண்டுள்ள அணியாக லக்னோ உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று ஐபிஎல் அரங்கில் இரு அணிகள் சார்பில் மிரட்டல் ஆட்டம் அரங்கேறும் என்பதில் ஐயமில்லை.
அதே சமயத்தில் இந்த போட்டி பெங்களூர் அணியின் ஹோம் கிரவுண்ட் ஆன சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளதால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஹாட்ரிக் வெற்றிக்கு முடிவு கட்டி தனது தோல்வியில் இருந்து மீண்டு வரும் என்று பெங்களூர் ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கையோடு உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.