பெங்களூர் மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த முக்கிய அப்டேட்..!! | rcb vs lsg 2023 preview

ஐபிஎல் 2023 தொடரில் அடுத்த அதிரடி போட்டியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதும் போட்டி அரங்கேற உள்ளது. இந்த போட்டிக்கான பிளேயிங் லெவன், வெற்றி கணிப்பு, ட்ரீம் லெவன் கணிப்பு , பிட்ச் அறிக்கை உள்ளிட்ட முக்கிய விவரங்களை காண்போம்.
பாப் டு பிளெசிஸ் தலைமையில் ஆன ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஐபிஎல் 2023 அரங்கில் முதல் போட்டியில் மிரட்டல் வெற்றியும் கடைசியாக விளையாடிய போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. அதே சமயத்தில் கே எல் ராகுல் தலைமையில் ஆன லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை தொடரில் விளையாடிய 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்று அசத்தியுள்ளது, குறிப்பாக கடைசி போட்டியில் மிரட்டல் வெற்றியை பெற்று சிறந்த பார்மில் உள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் அரங்கில் பெங்களூர் அணி சார்பில் முந்தைய போட்டியில் அடைந்த தோல்வியில் இருந்து மீண்டு வரும் எண்ணத்தில் உள்ளதாலும், லக்னோ அணி சார்பில் தொடரில் வெற்றி பயணத்தை தொடரும் எண்ணத்தில் உள்ளதாலும் கட்டாயம் ஒரு மிரட்டல் ஆட்டம் இரு அணிகள் சார்பில் அரங்கேறும் என்பதில் ஐயமில்லை.
போட்டி குறித்த விவரம் :
15 வது லீக் போட்டி : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
நேரம் & நாள் : 7:30 p.m & திங்கட்கிழமை
தேதி : 10 ஏப்ரல் 2023
மைதானம் : எம்.சின்னசாமி மைதானம், பெங்களூர்.
ஒளிபரப்பு தளம் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் & ஜியோ சினிமா.
வெற்றி கணிப்பு :
ராயல் சல்லேங்ஸ் பெங்களூரு அணியை பொறுத்தவரை மிகவும் பலம் வாய்ந்த அணியாக தெரிகிறது, சிறந்த முன்னணி பேட்ஸ்மேன்கள், ஆல்ரவுண்டர்கள் அடங்கிய அணியாக உள்ளது. அதே சமயத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை பொறுத்தவரை மிரட்டல் பேட்டிங் யூனிட்டை கொண்டுள்ளது,மேலும் சிறந்த பவுலர்கள் உள்ள அணியாகவும் விளங்குகிறது.
இந்நிலையில் போட்டி நடைபெறும் மைதானம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஹோம் கிரவுண்ட் ஆக உள்ளதால் வெற்றி வாய்ப்பு லக்னோ அணியை ஒப்பிடும் போது பெங்களூரு அணிக்கு அதிகமாக உள்ளது என்று தெரிய வந்துள்ளது. மேலும் பெங்களூர் மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையில் அசத்தல் போட்டி அரங்கேறும் என்று மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிட்ச் அறிக்கை :
பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் பேட்ஸ்மேன்கள் அதிரடி பேட்டிங் வெளிப்படுத்தக்கூடிய தன்மை கொண்ட மைதானமாக உள்ளது, அதாவது மிக சிறிய மைதானமாக உள்ளதால் கண்டிப்பாக அதிக ரன்கள் பதிவாக கூடிய போட்டியாக இந்த போட்டி இருக்கும் என்பதில் ஐயமில்லை, இந்த பிட்சில் 180 ரன்களுக்கு மேல் பதிவு செய்தால் எதிரணியை எதிர்கொள்ள நல்ல இலக்காக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரீம் லெவன் கணிப்பு :
கேப்டன் : கைல் மேயர்ஸ்
துணை கேப்டன் : பாப் டு பிளெசிஸ்
பேட்ஸ்மேன்கள் : விராட் கோலி, கே எல் ராகுல்,
ஆல்ரவுண்டர்கள் : டேவிட் வில்லி, க்ருனால் பாண்டியா, மஹிபால் லோம்ரோர்.
விக்கெட் கீப்பர் : நிக்கோலஸ் பூரன்
பவுலர்கள் : முகமது சிராஜ், ரவி பிஷ்னோய், மார்க் வூட்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பிளேயிங் லெவன் (தோராயமான) : விராட் கோலி, பாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), க்ளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோ மோர், மைக்கேல் பிரேஸ்வெல், தினேஷ் கார்த்திக் (வி.கீ), ஷாபாஸ் அகமது, டேவிட் வில்லி, கர்ன் ஷர்மா, ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பிளேயிங் லெவன் (தோராயமான) : கே எல் ராகுல் (கேப்டன்), குயின்டன் டி காக், கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன் (வி.கீ), க்ருனால் பாண்டியா, அமித் மிஸ்ரா, மார்க் வூட், யாஷ் தாக்கூர், ஜெய்தேவ் உனத்கட், ரவி பிஷ்னோய்.