பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதும் போட்டிக்கான டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் அப்டேட்..!! | rcb vs kkr 2023 toss update

ஐபிஎல் 2023 தொடரில் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சின்னசாமி மைதானத்தில் பலப்பரீட்சை மேற்கொள்ள களமிறங்க உள்ளார்கள். இந்த மிரட்டல் போட்டிக்கான டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் வெளியானது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பொறுத்தவரை தற்போது மிரட்டல் பார்மில் உள்ளது, குறிப்பாக அணியின் கேப்டன் பாப் டு பிளெசிஸ் இம்பாக்ட் பிளேயராக செயல்பட்டு வரும் நிலையில் அணியை முன்னணி வீரர் விராட் கோலி வழிநடத்தி வருகிறார். கடந்த 2 போட்டிகளில் பெங்களூர் அணி விராட் கோலி தலைமையில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.
அதே சமயத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது கேப்டன் நிதிஷ் ராணா தலைமையில் கடந்த சில போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்விகளை தழுவி மிகவும் மோசமான நிலையில் உள்ளது, குறிப்பாக நடப்பு தொடரில் வெறும் 2 வெற்றிகளை மட்டும் பெற்றுள்ள கொல்கத்தா அணி அதில் ஒரு வெற்றியை பெங்களூரு அணிக்கு எதிராக பெற்றுள்ளது.
இந்நிலையில் சிறந்த பார்மில் இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தனது தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று அசத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் கொல்கத்தா அணி தனது தோல்விகளில் இருந்து வெளியேறும் வகையில் பெங்களூரு அணிக்கு எதிரான மீண்டும் வெற்றி பெற முழுவீச்சில் செயல்படும் என்று தெரிய வந்துள்ளது.
தற்போது இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் தற்காலிக கேப்டன் விராட் கோலி பவுலிங் செய்ய முடிவு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்ய நிதிஷ் ராணா தலைமையில் ஆன கொல்கத்தா அணி களமிறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பிளேயிங் லெவன் : விராட் கோலி(கேப்டன்), ஷாபாஸ் அகமது, கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோ மோர், தினேஷ் கார்த்திக்(வி.கீ), சுயாஷ் பிரபு தேசாய், வனிந்து ஹசரங்கா, டேவிட் வில்லி, விஜயகுமார் வைஷாக், ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளேயிங் லெவன் : என் ஜெகதீசன்(வி.கீ), ஜேசன் ராய், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா(கேப்டன் ), ரின்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், டேவிட் வைஸ், வைபவ் அரோரா, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி.