கொல்கத்தா அணிக்கு பதிலடி கொடுக்குமா..?? பெங்களூரு அணி…!! ரசிகர்கள் எதிர்பார்ப்பு..!! | rcb vs kkr 2023 match preview

ஐபிஎல் 2023 தொடரின் இரண்டாவது கட்ட போட்டிகள் ஆரம்பித்து விட்ட நிலையில் அனைத்து அணிகளும் அடுத்து வரும் 36 வது லீக் போட்டியில் பங்கேற்க முழுவீச்சில் களமிறங்க உள்ளார்கள், குறிப்பாக இந்த வரிசையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளார்கள்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பொறுத்தவரை அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை பெற்று வருகிறது, குறிப்பாக கடந்த 2 போட்டிகளில் பெங்களூர் அணி முன்னணி வீரர் விராட் கோலி தலைமையில் களமிறங்கி வெற்றிகளை பெற்று அசத்தி வருகிறது. அதே சமயத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது தொடர்ச்சியாக தோல்விகளை பெற்று மிகவும் மோசமான நிலையில் பின் தங்கி உள்ளது.
பெங்களூர் அணி நடப்பு தொடரில் 3 தோல்விகளை பெற்றுள்ளது, அதில் ஒரு தோல்வி கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் அரங்கேறியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மோதும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தனது வெற்றி பயணத்தை தொடருமா..?? அல்லது கொல்கத்தா அணி தனது தோல்விக்கு முடிவு கட்டுமா என்று பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முன்னணி வீரர்கள் விராட் கோலி, பாப் டூ பிளேஸிஸ், கிளென் மாக்ஸ்வெல் ஆகியோர் சிறந்த பார்மில் உள்ளார்கள், குறிப்பாக அணியின் முன்னணி பவுலர் முகமது சிராஜ் அதிரடி பவுலிங்கை வெளிப்படுத்தி வருகிறார். அதே சமயத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா மற்றும் வருண் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் மிரட்டல் பார்மில் இருந்தாலும் அணி தொடர் தோல்விகளை தான் சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஹோம் கிரவுண்ட் ஆன சின்னசாமி மைதானத்தில் வைத்து கொல்கத்தா அணி அளித்த தோல்விக்கு விராட் கோலியின் பெங்களூர் அணி பதிலடி கொடுக்குமா..?? என்று பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.