அதிரடி சதம் அடித்த எதிரெதிர் அணி வீரர்கள்.. ஆனால், வென்றதோ இவங்க தான்.. | RCB vs GT IPL 2023

இந்திய மண்ணில் 2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரில் 70 ஆவது போட்டியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையே ஐபில் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியானது பெங்களூரில் எம்.சின்னசுவாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.. இந்தப் போட்டி மே 21, 2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 07.30 மணி அளவில் நடந்தது.
இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பௌலிங்கைத் தேர்வு செய்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையே நடந்த போட்டியில் முதலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதில், விராட் கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல், 61 பந்துகளுக்கு 101 ரன்கள் எடுத்திருந்தார். மேலும், டூ பிளக்ஸிஸ் 19 பந்துகளுக்கு 28 ரன்கள் எடுத்து பின்னர் ராகுல் திவேட்டியாவால் விக்கெட் இழந்தார். இதனைத் தொடர்ந்து, மேக்ஸ்வெல் 5 பந்துகளுக்கு 11 ரன்கள் எடுத்து ரஷித் கான் ஆல் அவுட் செய்யப்பட்டார். மேலும், லோம்ரோர் 3 பந்துகளுக்கு 1 ரன் மட்டுமே அடித்திருந்தார். எம் பிரேஸ்வெல் 16 பந்துகளுக்கு 26 ரன்களும், அனுஜ் ராவத் 15 பந்துகளுக்கு 23 ரன்களும் எடுத்திருந்தனர். இதில், பெங்களூர் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுகளுடன் 197 ரன்கள் எடுத்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, பேட்டிங் செய்த குஜராத் அணியும் பெங்களூர் அணிக்கு சலைத்தது இல்லை. இதில், முதலில் வ்ருத்திமேன் சஹா 14 பந்துகளுக்கு 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மேலும், ஷுப்மன் கில் 52 பந்துகளுக்கு 104 ரன்கள் எடுத்த நிலையில் போட்டியின் கடைசி ஓவர் வரை ஆட்டமிழக்காமல் விளையாடினார். விஜய் சங்கர் 35 பந்துகளுக்கு 53 ரன்கள் அடித்தார். தசுன் ஷனகா 3 பந்துகளுக்கு ஒரு ரன் கூட அடிக்காமல் ஆட்டமிழந்தார். மேலும், டேவிட் மில்லை 7 பந்துகளுக்கு 6 ரன்கள் அடித்திருந்தார். ராகுல் திவேட்டியா 5 பந்துகளுக்கு 4 ரன்கள் அடித்திருந்தார். இந்நிலையில் போட்டியின் முடிவானது 19.1 ஓவரிலேயே முடிவடைந்து விட்டது. 19.1 ஓவரில் 4 விக்கெட்டுகளுடன் 198 ரன்களைப் பெற்று ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குஜராத் டைட்டன்ஸ் அணி.