ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதும் போட்டி குறித்த கணிப்புகள்..!! | rcb vs dc match 2023 prediction

ஐபிஎல் 2023 ஆம் அரங்கில் அடுத்த அதிரடி போட்டியாக வெற்றியை நோக்கி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோத உள்ளார்கள். இந்த போட்டிக்கான பிளேயிங் லெவன், பிட்ச் அறிக்கை, ட்ரீம் லெவன் கணிப்பு உள்ளிட்ட முக்கிய விவரங்களை காண்போம்.
ஐபிஎல் தொடரில் கேப்டன் டு பிளெசிஸ் தலைமையில் களமிறங்கி விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விளையாடிய 3 போட்டிகளில் ஒரு வெற்றியை தான் பெற்றுள்ளது, குறிப்பாக கடைசியாக விளையாடிய போட்டியில் இறுதிப் பந்தில் தோல்வியை தழுவியுள்ளது. அதே சமயத்தில் டேவிட் வார்னர் தலைமையில் விளையாடி வரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இன்னும் ஒரு வெற்றி கூட பெறாமல் தொடர் தோல்வியை பெற்று வருகிறது.
போட்டி குறித்த விவரம் :
20 வது லீக் போட்டி : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs டெல்லி கேபிடல்ஸ்
நேரம் & நாள் : 3:30 p.m & சனிக்கிழமை
தேதி : 15 ஏப்ரல் 2023
மைதானம் : எம்.சின்னசாமி மைதானம், பெங்களூரு.
ஒளிபரப்பு தளம் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் & ஜியோ சினிமா
பிட்ச் அறிக்கை :
இந்த போட்டி நடைபெற உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் உள்ள பிட்ச் ஒரு அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்த மிகவும் உதவும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான், மேலும் இந்த மைதானத்தில் எத்தனை ரன்கள் இலக்காக பதிவு செய்தலும் சேஸிங் செய்யும் அணி எளிதில் அடையும் என்று தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இந்த பிட்சில் டாஸ் வெல்லும் அணி முதலில் பவுலிங்
செய்ய தேர்வு செய்வது வெற்றிக்கு உதவும் என்று தெரிய வந்துள்ளது.
ட்ரீம் லெவன் டீம் கணிப்பு :
கேப்டன் - கிளென் மேக்ஸ்வெல்
துணை கேப்டன் - ஃபாஃப் டு பிளெசிஸ்
விக்கெட் கீப்பர் - அபிஷேக் போரல்
பேட்ஸ்மேன்கள் - விராட் கோலி, டேவிட் வார்னர், மேக்ஸ்வெல்
ஆல்-ரவுண்டர்கள் - அக்சர் படேல், ஷாபாஸ் அகமது
பந்துவீச்சாளர்கள் – பார்னெல், அன்ரிச் நோர்ட்ஜே, வனிந்து ஹசரங்க
வெற்றி கணிப்பு :
ஐபிஎல் 2023 ஆம் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பொறுத்தவரை மிரட்டல் பேட்டிங் லைன் அப் கொண்டுள்ள அதிரடி அணியாக உள்ளது. மேலும் கடைசியாக விளையாடிய போட்டியில் கடைசி பந்தில் தோல்வியை தழுவிய நிலையில், டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் வெற்றியை பதிவு செய்து தனது வெற்றி பயணத்தை மீண்டும் தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் முழுவீச்சில் செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை பொறுத்தவரை இன்னும் முதல் வெற்றியை பதிவு செய்ய போராடி வருகிறது, தொடரில் விளையாடிய 4 போட்டிகளில் தொடர் தோல்வியை தழுவி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளதால் கட்டாயம் முதல் வெற்றியை பதிவு செய்ய முழுவீச்சில் செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஹோம் கிரௌண்டில் நடைபெறுவதால் வெற்றி வாய்ப்பு டெல்லி கேபிட்டல்ஸ் அணியை விட பெங்களூரு அணிக்கு அதிகமாக உள்ளது என்று தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பிளேயிங் லெவன் (தோராயமான ): விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (வி,கீ ), வெய்ன் பார்னெல், வனிந்து ஹசரங்க, ஹர்ஷல் பட்டேல், சித்தார்த் கவுல், முகமது சிராஜ்.
டெல்லி கேபிட்டல்ஸ் பிளேயிங் லெவன் (தோராயமான ): பிருத்வி ஷா, டேவிட் வார்னர் (கேப்டன் ), பில் சால்ட் (வி.கீ), மணீஷ் பாண்டே, அக்சர் படேல், லலித் யாதவ், ரிபால் படேல், கலீல் அகமது, குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, முஸ்தபிசுர் ரஹ்மான்.