டாஸ் வென்ற டெல்லி பௌலிங் தேர்வு...முதலில் களமிறங்குகிறது பெங்களூரு அணி! | RCB vc DC IPL 2023 Toss Update

ஐபிஎல் 2023 தொடரின் 20வது லீக் போட்டி ராயல் சேலன்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் இடையே இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் குறித்த விவரங்களைப் பற்றி இந்த பதிவில் பாப்போம்.
இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை நடந்த போட்டியிகளின் அடிப்படையில் இருக்கும் தரவரிசை பட்டியலில் கடைசி மூன்று இடங்களில் இருக்கின்றனது RCB மற்றும் DC. இதில் பெங்களூரு அணி 3 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் வெற்றியும், டெல்லி அணி 4 போட்டிகளில் இதுவரை ஒரு வெற்றியை கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த போட்டியானது இரண்டு அணிக்கும் மிக முக்கியமானது என்பதால் மிக கடுமையாக போட்டி நிகழும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
பெங்களூரு அணியின் கேப்டன் ஃபா டு பிளெஸ்ஸிஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் இருவரின் தலைமையில் இன்றைய போட்டி நடைபெற உள்ளது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் பௌலிங்கை தேர்வு செய்துள்ளது. எனவே, முதலில் பெங்களூரு அணி பேட் செய்ய உள்ளதால் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர்.
ராயல் சேலன்சர்ஸ் பெங்களூரு பிளேயிங் லெவன் - விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ்(C), மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக், வனிந்து ஹசரங்கா, ஹர்சல் படேல், வெய்ன் பார்னல், முகமது சிராஜ், விஜய்குமார் வைஷாக்.
டெல்லி கேப்பிடல்ஸ் பிளேயிங் லெவன் – டேவிட் வார்னர் (C), மிட்செல் மார்ஷ், யாஷ் துல், மணீஷ் பாண்டே, அக்சர் படேல், அமன் ஹக்கிம் கான், லலித் யாதவ், அபிஷேக் போரல், குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, முஸ்தாபிசுர் ரஹ்மான்.