ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டி குறித்த முழு அப்டேட்..!! | rcb vs csk 2023 preview
![ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டி குறித்த முழு அப்டேட்..!! | rcb vs csk 2023 preview](https://www.sportspartans.com/assets/uploads/news-2117.jpg)
ஐபிஎல் 2023 அரங்கில் ரசிகர்கள் அனைவரும் எதிர்நோக்கி காத்திருக்கும் முக்கிய போட்டியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ள போட்டி அமைய உள்ளது. இந்த மிரட்டல் போட்டிக்கான பிளேயிங் லெவன், பிட்ச் அறிக்கை, ட்ரீம் லெவன் டீம் கணிப்பு உள்ளிட்ட முக்கிய விவரங்களை காண்போம்.
ஐபிஎல் தொடரில் எப்போதும் அதிரடி ஆட்டம் அரங்கேறும் போட்டியாக கேப்டன் பாப் டு பிளெசிஸ் தலைமையில் ஆன ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கேப்டன் எம் எஸ் தோனி தலைமையில் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டி இருக்கும் என்று கூறினால் மிகையில்லை.
இந்த 2023 ஆம் தொடரில் பெங்களூர் மற்றும் சென்னை அணிகள் பங்கேற்ற 4 போட்டிகளில் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.மேலும் இந்த 2023 தொடரில் லீக் போட்டியில் இரு அணிகளும் ஒரே ஒரு முறை தான் மோத உள்ளார்கள் என்பதால் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டி குறித்த விவரம் :
24 வது லீக் போட்டி : குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
நேரம் & நாள் : 7:30 p.m & திங்கட்கிழமை
தேதி : 17 ஏப்ரல் 2023
மைதானம் : எம்.சின்னசாமி மைதானம், பெங்களூரு.
ஒளிபரப்பு தளம் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் & ஜியோ சினிமா.
பிட்ச் அறிக்கை:
இந்த போட்டி நடைபெற உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் உள்ள பிட்ச் அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்த உதவும் என்பதால் அதிகப்படியான இலக்கு பதிவாக உள்ள போட்டியாக அமையும் என்று தெரிய வந்துள்ளது. மேலும் இந்த பிட்சில் சேஸிங் தேர்வு செய்தால் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதால்,டாஸ் வெல்லும் அணி பவுலிங்கை தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெற்றி கணிப்பு :
இந்த ஐபிஎல் 2023 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மிரட்டல் பார்மில் உள்ளது, குறிப்பாக அணியின் முன்னணி வீரர்கள் விராட் கோலி மற்றும் கேப்டன் டு பிளெசிஸ் அணிக்கு பலம் சேர்க்கிறார்கள். அதே சமயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ருதுராஜ் கெய்க்வாட், ரஹானே, கான்வே போன்ற அதிரடியான பேட்டிங் லைன் அப் கொண்டுள்ள அணியாக உள்ளது, எனவே இரு அணிகளுக்கும் இடையில் வெற்றி பெற மிரட்டல் ஆட்டம் அரங்கேறும் என்பதில் ஐயமில்லை.
பெங்களூரு அணியை பொறுத்தவரை கடைசியாக தொடரில் விளையாடிய போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது, ஆனால் சென்னை அணி ராஜஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் இறுதியில் தோல்வியை தழுவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் சமஅளவில் வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரீம் லெவன் டீம் கணிப்பு :
கேப்டன்: விராட் கோலி
துணை கேப்டன்: ருதுராஜ் கெய்க்வாட்
விக்கெட் கீப்பர்: எம் எஸ் தோனி
பேட்ஸ்மேன்கள் : அஜிங்க்யா ரஹானே, டெவோன் கான்வே, டு பிளெசிஸ்.
ஆல்-ரவுண்டர்கள்: கிளென் மேக்ஸ்வெல், ரவீந்திர ஜடேஜா,
பந்துவீச்சாளர்கள்: துஷார் தேஷ்பாண்டே, முகமது சிராஜ், வனிந்து ஹசரங்கா.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பிளேயிங் லெவன் (தோராயமான ) : விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ்(கேப்டன்), மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக்(வி.கீ), வனிந்து ஹசரங்கா, ஹர்சல் படேல், வெயின் பார்னல், முகமது சிராஜ், விஜயகுமார் வைஷாக்.
சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன் (தோராயமான ) : டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம் எஸ் தோனி(கேப்டன்/ வி.கீ), சிசண்டா மகலா, மகேஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சிங்.