பெங்களூர் vs சென்னை மோதும் போட்டிக்கான டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் வெளியானது…!! | rcb vs csk 2023 match toss

ஐபிஎல் 2023 தொடரில் இன்றைய போட்டியில் மிரட்டல் ஆட்டத்தை பாப் டு ப்ளேசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டிக்கான டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் உள்ளிட்ட தகவல்கள் வெளியானது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் முன்னணி வீரர்கள் விராட் கோலி, டு ப்ளேசிஸ், கிளென் மாக்ஸ்வெல் உள்ளிட்டோர் மிரட்டல் பார்மில் உள்ளார்கள். அதே சமயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே ஆகியோரும் சிறந்த பார்மில் உள்ளதால் ஒரு சிறந்த போட்டியை காண ரசிகர்கள் தயார் நிலையில் இருக்ககலாம் என்று கூறினால் மிகையில்லை.
இதுவரை ஐபிஎல் அரங்கில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிய போட்டிகளில், 19 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் 10 போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றியை கைப்பற்ற இரு அணிகள் சார்பில் கட்டாயம் அதிரடி ஆட்டம் அரங்கேறும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் டு பிளெசிஸ் பவுலிங் தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்ய எம் எஸ் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் சென்னை அணி கடந்த போட்டியின் தோல்வியில் இருந்து மீண்டு வர வெற்றி பெறும் வகையில் பெங்களூர் அணிக்கு எதிராக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பிளேயிங் லெவன் : விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (வி.கீ), வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் பட்டேல், வெய்ன் பார்னெல், முகமது சிராஜ், வைஷாக் விஜயகுமார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன் : டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அம்பதி ராயுடு, எம் எஸ் தோனி (கேப்டன் & வி.கீ), மகேஷ் தீக்ஷனா, மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே.