பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்பாரா தோனி.?? வெற்றி பெறுமா..?? சென்னை சூப்பர் கிங்ஸ் ..!! | rcb vs csk 2023 ipl update

இந்தியாவின் முக்கிய தொடராக விளங்கும் ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ள நிலையில், சென்னை அணியில் பென் ஸ்டோக்ஸ் இடத்தை தக்க வைத்துக் கொண்ட இந்திய முன்னணி வீரர், மேலும் போட்டியில் தோனி பங்கேற்பது..?? மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி நிலை உள்ளிட்ட முக்கிய தகவல்கள் வெளியானது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக சின்னசாமி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த போட்டியின் தோல்வியில் இருந்து மீளும் வகையில் வெற்றியை நோக்கி களமிறங்க உள்ளது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம் எஸ் தோனி பங்கேற்பாரா..?? இல்லையா..?? என்று ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். அதாவது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய போட்டியில் கேப்டன் எம் எஸ் தோனி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியின் அருகில் கொண்டு சென்றார்.
இந்த போட்டியில் எதிர்பாராத விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் பந்தில் தோல்வியை தழுவியது, ஐபிஎல் தொடரில் பல போட்டிகளில் கடைசி பந்தில் சென்னைக்கு வெற்றியை பெற்று தந்துள்ள தோனி இந்த போட்டியில் பெற்று தர முடியாமல் போனது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. அதன்பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் அளித்த பேட்டியில் தோனி முழங்காலில் சிறிய காயத்துடன் போட்டியில் பங்கேற்றார் என்றும். அதனால் அவரால் முழுவீச்சில் போட்டியில் செயல்பட முடியவில்லை என்று கூறினார்.
இந்த பதிவை பார்த்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் மற்றும் தோனியின் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தார்கள், மேலும் 41 வயதில் சென்னை அணிக்காக காயத்தை கூட பொறுட்படுத்தாமல் களமிறங்கி அதிரடியாக விளையாடிய தோனி நினைத்து நெகிழ்ச்சி அடைந்தார்கள் என்று கூறினால் மிகையில்லை. இந்நிலையில் காயத்தினால் அவதிப்பட்டு வரும் எம் எஸ் தோனி இன்று நடைபெற உள்ள பெங்களூரு அணிக்கு எதிரான முக்கிய போட்டியில் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை மிரட்டலான பார்மில் உள்ள துவக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவோன் கான்வே மற்றும் பென் ஸ்டோக்ஸ் இடத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் முன்னணி வீரர் அஜிங்கிய ரஹானே அணிக்கு பலம் சேர்க்கிறார்கள். மேலும் அணியின் ஆல்ரவுண்டர் கள் ஜடேஜா, மொயீன் அலி போன்றார் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், பவுலர்கள் தேஷ்பாண்டே,தீக்க்ஷனா, ஆகாஷ் சிங் ஆகியோர் சிறந்த பவுலிங்கை வெளிப்படுத்தினால் அணியின் வெற்றி உறுதி என்பதில் ஐயமில்லை.
சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன் (தோராயமான) : டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அம்பதி ராயுடு, எம்எஸ் தோனி (கேப்டன் & வி.கீ), மகேஷ் தீக்ஷனா, மதிஷா பத்திரனா/டுவைன் பிரிட்டோரியஸ், துஷார் தேஷ்பாண்டே.