டூ பிளெசிஸ் மற்றும் விராட் கோலி அதிர டியில் மும்பை அணி சிதறியது..!! சிக்ஸர் மழை பொழிந்தது..!! | mi vs rcb 2023 match
![டூ பிளெசிஸ் மற்றும் விராட் கோலி அதிர டியில் மும்பை அணி சிதறியது..!! சிக்ஸர் மழை பொழிந்தது..!! | mi vs rcb 2023 match](https://www.sportspartans.com/assets/uploads/news-2011.jpg)
ஐபிஎல் 2023 ஆம் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி மும்பை இந்தியன்ஸ் அணியை துவம்சம் செய்தது. பெங்களூரு அணி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி அரங்கை அதிர வைத்தார்கள்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் பவுலிங்கை தேர்வு செய்த நிலையில், அசத்தல் பவுலிங்கை வெளிப்படுத்திய பெங்களூரு பவுலர்கள் மும்பை அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களை திணறடித்து வேகமாக பெவிலியன் திருப்பினார்கள். அதன்பின் களமிறங்கிய மும்பை அணியின் இளம் வீரர் திலக் வர்மா சற்று அதிரடியாக விளையாடி 84*(46) ரன்கள் பெற்ற நிலையில் பெங்களூர் அணிக்கு 172 ரன்கள் இலக்காக வழங்கப்பட்டது.
இதனை அடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி துவக்க வீரர்கள் டூ பிளெசிஸ் மற்றும் விராட் கோலி மிரட்டல் பேட்டிங்கை வெளிப்படுத்தி மும்பை அணியின் பவுலர்களை நாலா பக்கமும் சிதறடித்தார்கள். பெங்களூர் அணியின் ஹாம் கிரௌன்டு ஆன சின்னசாமி மைதானத்தில் சிக்ஸர் மழையை கோலி மற்றும் பிளெசிஸ் பொழிந்தார்கள்.
இந்த போட்டியில் 10 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி ஒரு விக்கெட் கூட இழக்காமல் 97 ரன்கள் குவித்து டூ பிளெசிஸ் முதலில் அரைசதம் கடந்து அசத்தினார், அவரை தொடர்ந்து பெங்களூரு அணி முன்னணி வீரர் விராட் கோலி அரைசதம் பதிவு செய்தார். ஐபிஎல் அரங்கில் விராட் கோலி 50 வது அரை சதத்தை பதிவு செய்து சாதனை படைத்தார்.
அதன்பின் மும்பை அணி முயற்சியில் டூ பிளெசிஸ் 6 சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரி உட்பட 73(43) ரன்கள் பதிவு செய்து கேமரூன் கிறீன் பந்தில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இறுதிவரை களத்தில் கம்பீரமாக நின்று அதிரடி பேட்டிங் செய்த முன்னணி வீரர் விராட் கோலி 82*(49) ரன்கள் பதிவு செய்து 16.2 ஓவர்களில் மும்பை அணி அளித்த இலக்கை அடைந்து மாபெரும் வெற்றியை ஐபிஎல் அரங்கில் பதிவு செய்து அசத்தியது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பொறுத்தவரை இந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் சாம்பியன் பட்டம் எங்களுக்கு தான் என்று அனைவருக்கும் தெரியப்படுத்தும் வகையில் மிரட்டல் வெற்றியை பதிவு செய்து அசத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை இந்தியன்ஸ் அணி மோசமான தோல்வியை பெற்றுள்ள நிலையில் விரைவில் அடுத்த போட்டியில் மீண்டு வந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.