ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இருந்து முக்கிய வீரர் விலகல்…!! | rcb player ruled out 2023

ஐபிஎல் தொடரின் 16 வது சீசனை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மிகவும் அதிரடியாக தொடங்கி அசத்திய நிலையில் ரசிகர்கள் மிகுந்த ஆனந்தத்தில் இருந்தார்கள், ஆனால் தற்போது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் ஒரு முக்கிய வீரர் தொடரில் இருந்து விலகி உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் பாப் டு ப்ளேசிஸ் தலைமையில் மிகவும் அதிரடியாக ஐபிஎல் 2023 தொடரை தொடங்கியது, குறிப்பாக தொடரில் இடம்பெற்றுள்ள அனைத்து அணிகளுக்கும் தனது நிலையை உணர்த்தும் வகையில் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அசத்தியது என்று கூறினால் மிகையில்லை.
ஐபிஎல் 2023 ஆம் தொடரில் இருந்து ஆர்சிபி வீரர் ரஜத் படிதார் காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக விலகி உள்ளார் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது, முன்னதாக ஐபிஎல் தொடரின் பாதி போட்டிகளில் ரஜத் படிதார் விளையாடமாட்டார் என்ற தகவல் வெளியான நிலையில் தற்போது முழுமையாக விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பெங்களூரு அணி நிர்வாகம் சார்பில் ரஜத் படிதார் இடத்தை நிரப்ப புதிய வீரர் யாரையும் இன்னும் தேர்வு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை ஐபிஎல் தொடரில் ஒரு முறை கூட சாம்பியன் பட்டம் வெல்லாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, இந்த 2023 ஆண்டு கட்டாயம் சாம்பியன் பட்டத்தை வெல்ல முழு வீச்சில் செயல்படும் என்பது தெளிவாக தெரிகிறது. ஐபிஎல் 2023 ஆம் தொடரில் பெங்களூர் அணி அடுத்த போட்டியில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.