ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வீரர் விராட் கோலி படைத்த மாபெரும் சாதனைகள்..!! | rcb virat kohli ipl records

இந்தியாவின் முக்கிய உள்நாட்டு தொடராக விளங்கும் ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் வரும் மார்ச் 31 ஆம் தேதி ஆரம்பமாக உள்ள நிலையில் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்தில் தொடரை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். அதற்கு முன்னதாக ஐபிஎல் தொடரில் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் சாதனைகள் படைத்த வீரர்கள் பட்டியலில் முதன்மையானவராக விளங்கும் விராட் கோலி உடைய சாதனைகளை பற்றி காண்போம்.
ஐபிஎல் தொடரில் முக்கிய அணியாக விளங்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் முன்னணி வீரர் விராட் கோலி அதிரடி ஆட்டத்துக்கு பேர் போன வீரர் என்று கூறினால் மிகையில்லை.
ஐபிஎல் தொடரில் ரன் மெஷின் விராட் கோலியின் சில சாதனை துளிகள் :
1) ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் பெற்ற வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் விராட் கோலி உள்ளார், குறிப்பாக 223 போட்டிகளில் விளையாடி உள்ள கோலி 36.20 சராசரியுடன் 129.15 ஸ்ட்ரைக் ரெட்டுடன் 6624 ரன்கள் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2) ஐபிஎல் தொடரில் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது அசத்தல் பேட்டிங் மூலம் எதிரணி பவுலர்களை சிதறடிக்கும் விராட் கோலி, ஐபிஎல் 2016 ஆம் ஆண்டு தொடரில் தனது பார்மின் உச்சத்தில் இருந்த விராட் கோலி இந்த தொடரின் முடிவில் 973 ரன்கள் பதிவு செய்தார். இது தான் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு சீசனில் ஒரு வீரர் பதிவு செய்த அதிக ரன்கள் என்ற சாதனையாக இன்று வரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
3) ஐபிஎல் 2016 ஆம் தொடரில் விராட் கோலி 4 சதங்கள் பதிவு செய்து அசத்தினார், இது தான் ஐபிஎல் வரலாற்றில் இன்று வரை ஒரு சீசனில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச சதங்கள் எண்ணிக்கையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
4) 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் ஆரம்பத்தில் இருந்து தொடரில் இன்று வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி, ஐபிஎல் வரலாற்றில் ஒரே அணிக்காக மாறாமல் இன்று வரை விளையாடி வரும் வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆவார்.
5) ஐபிஎல் தொடரில் 6500 ரன்களுக்கு மேல் பதிவு செய்துள்ள ஒரே வீரர் விராட் கோலி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
6) ஐபிஎல் தொடரில் விராட் கோலி 188 இன்னிங்ஸில் 6000 ரன்கள் பெற்றதன் மூலம், வேகமாக 6000 பெற்ற வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
7) விராட் கோலி 5 ஐபிஎல் தொடர்களில் 500 ரன்கள் பெற்ற ஒரே பேட்ஸ்மேன் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார்.
8) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தான், அதிக நாட்கள் பெங்களூரு அணிக்கு கேப்டனாக செயல்பட்ட வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடரில் முக்கிய வீரராக விளங்கும் விராட் கோலி அனைத்து தொடர்களிலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக சிறப்பாக செயல்பட்டுள்ளார், ஆனால் இதுவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஒரு முறை கூட சாம்பியன் பட்டத்தை கைப்பற்றவில்லை என்பது தான் வருத்தத்திற்குரிய நிகழ்வாக உள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பிளே ஆப் சுற்று வரை சென்று தோல்வியை தழுவியது, இந்நிலையில் இந்த 2023 ஆம் ஆண்டு மிரட்டல் பார்மில் உள்ள விராட் கோலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஐபிஎல் 2023 தொடரில் பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை பெற அனைத்து வகையிலும் முயல்வார் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.