விராட் கோலிக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்..!! ரசிகர்கள் அதிர்ச்சி..!! | rcb player virat kohli fined by bcci

ஐபிஎல் 2023 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிய போட்டியில் பெங்களூரு சின்னசாமி மைதானமே அதிர்ந்தது என்று கூறினால் மிகையில்லை. இந்த போட்டியில் பிசிசிஐ விதிகளை மீறியதாக பெங்களூர் அணியின் முன்னணி வீரர் விராட் கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த போட்டியில் சென்னை மற்றும் பெங்களூர் இரு அணிகள் சார்பில் மிரட்டல் ஆட்டம் அரங்கேறியது, குறிப்பாக முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி சிக்ஸர் மழை பொழிந்தது. மேலும் 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 226 ரன்கள் பதிவு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர்களும் சென்னை அணிக்கு ஈடாக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார்கள், இருந்த போதிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்தபோது சிக்ஸர்கள் பறக்க விட்டு கொண்டிருந்த சென்னை அணியின் வீரர் சிவம் துபே உடைய கேட்சை பிடித்த அணியின் முன்னணி வீரர் விராட் கோலி மிகவும் ஆக்ரோஷமாக கொண்டாடினார். இதனால் ஐபிஎல் தொடரின் 2.2 விதியை விராட் கோலி மீறியதாக கூறப்பட்டு, பிசிசிஐ தரப்பில் இருந்து இந்த போட்டியில் விராட் கோலியின் சம்பளத்தில் இருந்து 10 சதவீதத்தை அபராதமாக விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.