ஐபிஎல் 2023 ஆம் தொடரில் இருந்து பெங்களூர் அணி முன்னணி வீரர் விலகல் ..!! | rcb ipl 2023 injury

ஐபிஎல் 2023 ஆம் தொடரில் இருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முன்னணி வேகப்பந்து பவுலர் காயம் காரணமாக முழுமையாக விலகி உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் முக்கிய தொடரான ஐபிஎல் தொடரின் 16 வது சீசனில் இருந்து பல முன்னணி வீரர்கள் காயம் காரணமாக விலகி உள்ளது ரசிகர்களுக்கு மிகுந்த சோகத்தை அளித்துள்ளது, அந்த வரிசையில் பெங்களூர் அணியின் இடது கை வேகப்பந்து பவுலர் ரீஸ் டோப்லி நடப்பு தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார் என்ற அணி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஐபிஎல் 20323 ஆம் தொடரின் பெங்களூரு அணி மும்பை அணிக்கு எதிராக விளையாடிய முதல் போட்டியில் முன்னணி வேகப்பந்து பவுலர் ரீஸ் டோப்லி தோள்பட்டையில் எதிர்பாராத விதமாக காயம் ஏற்பட்டதால் போட்டியில் இருந்து பாதியில் விலகினார். இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய ரீஸ் டோப்லி பெங்களூரு அணிக்கு பக்கபலமாக இருப்பர் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், தற்போது ஐபிஎல் தொடரில் இருந்து காயத்தினால் முழுமையாக விலகியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முன்னணி வீரர் பாஃப் டூ பிளெசிஸ் தலைமையில் மிரட்டல் அணியாக வலம் வருகிறது, ஐபிஎல் 2023 அரங்கில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் போட்டியில் வெற்றி பெற்றது. அதன்பின் நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக மோசமான தோல்வியை தழுவியது.
ஐபிஎல் ஏலத்தில் பெங்களூர் அணி சார்பில் 1.9 கோடிக்கு வாங்கப்பட்ட இங்கிலாந்து வீரர் ரீஸ் டோப்லி ஒரு போட்டியில் கூட முழுமையாக விளையாடாமல் காயம் காரணமாக விலகி உள்ளது அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது, அதே சமயத்தில் அணி நிர்வாகம் சார்பில் ரீஸ் டோப்லி இடத்திற்கு புதிய வீரரை ஒப்பந்தம் செய்வது பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.