ஐபிஎல் 2023 : வில் ஜாக்ஸ் பதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி களமிறங்கும் புதிய வீரர்..!!

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இருந்து காயம் காரணமாக விலகிய இளம் ஆல்ரவுண்டர் வில் ஜாக்ஸ்க்கு பதில் புதிய அசத்தல் ஆல்ரவுண்டர் ஒருவரை அணி நிர்வாகம் களமிறக்க ஒப்பந்தம் செய்துள்ளது.
ஐபிஎல் 2023 தொடரில் பெங்களூரு அணி சார்பில் ஏலத்தில் எடுக்கப்பட்ட இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஆல்ரவுண்டர் வில் ஜாக்ஸ் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் களமிறங்க இருந்த நிலையில், சமீபத்தில் வங்கதேச ஒரு நாள் தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இந்நிலையில் வில் ஜாக்ஸ் உடைய இடத்தில் களமிறங்க நியூசிலாந்து நாட்டை சேர்ந்த ஆல்ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல் பெங்களூரு அணி நிர்வாகம் சார்பில் ஒப்பந்தம் ஆகி உள்ளார். அதாவது 3.2 கோடி ரூபாவிற்கு பெங்களூரு அணி சார்பில் வாங்கப்பட்ட வில் ஜாக்ஸ் பதில் அந்த இடத்தில் மைக்கேல் பிரேஸ்வெல் 1 கோடி ரூபாவிற்கு ஒப்பந்தம் ஆகி உள்ளதாக அணி நிர்வாகம் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுவரை 16 டி 20 போட்டிகளில் விளையாடி உள்ள நியூசிலாந்து ஆல்ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல் 116 ரன்கள் மற்றும் 21 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார், மேலும் மைக்கேல் பிரேஸ்வெல் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் 2023 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தனது முதல் போட்டியில் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியோடு பலபரிச்சை மேற்கொள்ள உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.