பெங்களூர் கேப்டன் பாப் டு ப்ளேசிஸ் க்கு அபராதம் விதிப்பு..!! ஐபிஎல் நிர்வாகம் அதிரடி.!! | Rcb Faf Du Plessis Fined IPL 2023

ஐபிஎல் 2023 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதிய போட்டியில் மிரட்டல் ஆட்டம் அரங்கேறியது. ஐபிஎல் நிர்வாகம் சார்பில் இந்த போட்டியில் விளையாடிய பெங்களூரு அணி கேப்டன் பாப் டு ப்ளேசிஸ் க்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது, குறிப்பாக கேப்டன் பாப் டு ப்ளேசிஸ் லக்னோ அணி பவுலிங்கை துவம்சம் செய்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 5 சிக்ஸர்கள் 5 பவுண்டரிகள் உட்பட 79*(46) ரன்கள் பதிவு செய்து ஐபிஎல் அரங்கை அதிர வைத்தார்.
இந்நிலையில் பெங்களூர் அணி 213 ரன்களை லக்னோ அணிக்கு இலக்காக அளித்தது, அடுத்து பவுலிங் செய்த பெங்களூர் அணி சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தி முன்னணி வீரர்கள் விக்கெட்டை கைப்பற்றி அசத்தியது. அதன்பின் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி வீரர்கள் மார்கஸ் ஸ்டோனிஸ் மற்றும் நிக்கோலஸ் பூரான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் இறுதி ஓவர் வரை சென்ற போட்டியில் கடைசி பந்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் த்ரில் வெற்றி பெற்று அசத்தியது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் தோல்வியை தழுவியது, அணி ரசிகர்களுக்கு மிகுந்த சோகத்தை அளித்தது, மேலும் தற்போது பெங்களூர் அணி ஓவர்கள் வீசிய அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் அணியின் கேப்டன் பாப் டு ப்ளேசிஸ் க்கு ஐபிஎல் நிர்வாகம் சார்பில் 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் மோதிய மிகவும் அதிரடியான விறுவிறுப்பான போட்டியாக பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் எதிர்பாராத விதமாக தோல்வியை தழுவிய பெங்களூர் அணி அதிலிருந்து மீண்டு வந்து அசத்தல் ஆட்டத்தை தொடர்வார்கள் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.