பெங்களூர் அணி அசத்தல் பவுலிங்..!! திலக் வர்மா மிரட்டல் ஆட்டம்.!! | mi vs rcb 2023 match

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 5வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்து மும்பை அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களை சிதறடித்து அஸ்தினார்கள். அதன்பின் ஜோடி சேர்ந்த மும்பை அணியின் இளம் வீரர் திலக் வர்மா மிரட்டல் பேட்டிங்கை வெளிப்படுத்தி அணியின் நிலையை சரி செய்து போட்டியின் போக்கை மாற்றினார்.
இந்தியாவின் முக்கிய தொடரான ஐபிஎல் 2023ஆம் தொடரில் போட்டிகள் அதிரடியாக அரங்கேறி வரும் நிலையில், அந்த வரிசையில் பெங்களூர் மற்றும் மும்பை அணிகள் சின்னசாமி மைதானத்தில் விளையாடினார்கள். பெங்களூர் அணியின் ஹோம் கிரவுண்ட் ஆக விளங்கும் சின்னசாமி மைதானம் அதிரடி ஆட்டத்துக்கு பேர் போன மைதானம் ஆகும், ஆனால் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்பமே சறுக்கிறது.
பெங்களூரு அணி பவுலர்களை சமாளிக்க முடியாத மும்பை அணியின் முன்னணி வீரர்கள் உடனுக்குடன் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்கள், குறிப்பாக பெங்களூர் அணியின் முன்னணி பவுலர் முகமது சிராஜ் 3 ஓவர்கள் வீசி வெறும் 5 ரன்கள் வழங்கி 1 விக்கெட் கைப்பற்றினார். இதனை அடுத்து வந்த பெங்களூர் பவுலர்கள் ரீஸ் டாப்லே , ஆகாஷ் தீப் மற்றும் மைக்கேல் ப்ரஸ்வெல் தலா 1 விக்கெட்களை பெற்ற நிலையில் மும்பை அணி 10 ஓவர்கள் முடிவில் 55 ரன்கள் பதிவு செய்து 4 விக்கெட்டுகளை இழந்து என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை அணியின் நிலையை சற்று சரி செய்யும் வகையில் களமிறங்கிய இளம் வீரர் திலக் வர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து, அணி நல்ல டார்கெட்டை செட் செய்ய உதவினார். இறுதி வரை மிரட்டல் பேட்டிங்கை வெளிப்படுத்திய திலக் வர்மா மும்பை அணியின் காப்பானாக தனி ஒருவனாக அசத்தி திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 4 சிக்ஸர் 9 பவுண்டரி உட்பட 84*(46) ரன்கள் பதிவு செய்தார்.பெங்களூரு பவுலர் கார்ன் ஷர்மா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 171 ரன்கள் பதிவு செய்தது, ஆரம்பத்தில் சொதப்பிய மும்பை அணி நல்ல இலக்கை பெங்களூர் அணிக்கு அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து களமிறங்க உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி எப்படி மும்பை பவுலர்களை எதிர்கொண்டு விளையாட போகிறது என்பதை பொறுத்திருந்து காண்போம்.