விராட் கோலி மற்றும் டு பிளெசிஸ் அதிரடியில் லக்னோ அணி சிதறல் ..!! பெங்களூர் அணி கலக்கல்..!! | Rcb Stunning Innings vs Lsg 2023

ஐபிஎல் 2023 ஆம் தொடரில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி துவக்க வீரர்கள் கோலி மற்றும் பாப் டு பிளெசிஸ் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி பவுலர்களை சிதறடித்து அரங்கத்தில் வான வேடிக்கை காட்டினார்கள்.
லக்னோ அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பெங்களூரு அணியின் துவக்க வீரர்கள் விராட் கோலி மற்றும் பாப் டு பிளெசிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள், குறிப்பாக பவர் பிளேவில் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி சிக்சர்கள் பறக்க விட்டு அரங்கத்தை அதிர வைத்தார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதல் 6 ஓவர்கள் முடிவில் 56 ரன்கள் பதிவு செய்து அசத்தியது, அதில் விராட் கோலி மட்டும் 42 ரன்கள் பதிவு செய்தார், இது பவர் பிளேவில் விராட் கோலி உடைய அதிகபட்ச ரன் ஆக பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் அணியின் நாயகன் விராட் கோலி சிறப்பான விளையாடி 35 பந்துகளில் அரைசதம் பதிவு செய்தார். லக்னோ அணி பவுலர்களை ஒரு பக்கம் விராட் கோலி சிதறடிக்க மறுமுனையில் கேப்டன் பாப் டு பிளெசிஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன்பின் லக்னோ அணியின் நிலையில் மாற்றும் வகையில் விராட் கோலி விக்கெட்டை அமித் மிஸ்ரா கைப்பற்றினர்.
அதாவது அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விராட் கோலி 61(44) ரன்கள் பதிவு செய்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் லக்னோ சூப்பர் அணி சிறந்த பவுலிங்கை வெளிப்படுத்தி ரன்களை கட்டுப்படுத்தினார்கள். அதன்பின் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்திய பெங்களூர் அணி கேப்டன் பாப் டு பிளெசிஸ் அரைசதம் பதிவு செய்து அசத்தினார் லக்னோ அணிக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார் என்று கூறினால் மிகையில்லை.
பெங்களூர் அணி ஆல்ரவுண்டர் கிளென் மாக்ஸ்வெல் அதிரடியில் இணைந்து சிக்ஸர்கள் பறக்கவிட்டார், குறிப்பாக 24 பந்துகளில் அரைசதம் பதிவு செய்து அரங்கத்தை அதிர வைத்தார். அதன்பின் இறுதி ஓவரில் மார்க் வுட் பவுலிங்கில் 59(29) ரன்கள் பதிவு செய்த மாக்ஸ்வெல் ஆட்டமிழந்தார், போட்டியின் தொடக்கத்தில் இருந்து இறுதி வரை அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் பாப் டு பிளெசிஸ் 79*(46) ரன்கள் பதிவு செய்து அரங்கத்தை அதிர வைத்தார்.
இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 20 ஓவர்கள் முடிவில் 212 ரன்கள் பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது, அடுத்து களமிறங்க உள்ள லக்னோ அணி பெங்களூர் அணி அளித்த இமாலய இலக்கை அடையுமா..?? என்று பொறுத்திருந்து காண்போம்.