விராட் கோலி அசத்தல் ஆட்டம்..!! இறுதியில் பெங்களூரு அணியை கட்டுப்படுத்திய குல்தீப் ..!! | rcb batting vs dc 2023

ஐபிஎல் 2023 தொடரில் இன்று நடைபெற்று வரும் 20 வது லீக் போட்டியில் பாஃப் டு பிளெசிஸ் தலைமையில் ஆன ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டேவிட் வார்னர் தலைமையில் ஆன டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங்கை தேர்வு செய்த நிலையில் முதலில் பேட்டிங் செய்ய பெங்களூர் அணி களமிறங்கியது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி துவக்க வீரர்கள் விராட் கோலி மற்றும் டு பிளெசிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி டெல்லி பவுலர்களை சிதறடித்தார்கள். அதன்பின் களத்தில் சிறப்பாக பந்து வீசிய டெல்லி அணி ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் கேப்டன் டு பிளெசிஸ் 22(16) விக்கெட்டை பெற்றார், ஆனால் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய பெங்களூர் அணியின் முன்னணி வீரர் விராட் கோலி 34 பந்துகளில் அரைசதம் பதிவு செய்து அசத்தினர்.
அதன்பின் விராட் கோலி 50(34) விக்கெட்டை டெல்லி அணி ஆல்ரவுண்டர் லலித் யாதவ் பெற்று டெல்லி அணியின் பக்கம் போட்டியின் போக்கை திருப்பினார் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில், களமிறங்கிய பெங்களூரு அணி ஆல்ரவுண்டர் மாக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி ரன்கள் பெற தொடங்கினர்.இந்நிலையில் பெங்களூரு அணிக்கு முடிவு கட்டும் வகையில் களத்தில் அசத்திய டெல்லி அணியின் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் ஒரே ஓவரில் உடனுக்குடன் விக்கெட்களை பெற்று அசத்தினார்.
பெங்களூர் அணி முன்னணி வீரர்கள் அனைவரும் ஆட்டமிழந்த நிலையில், இறுதியாக களத்தில் இருந்த ஆல்ரவுண்டர் ஷாபாஸ் அகமது உடன் ஜோடி சேர்ந்து விளையாட இம்பாக்ட் பிளேயராக களமிறங்கிய இளம் வீரர் அனுஜ் ராவத் பொறுப்புடன் விளையாடிய நிலையில் 20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 174 ரன்கள் பதிவு செய்தது.இந்த போட்டியின் தொடக்கத்தில் அதிரடியாக விளையாடிய பெங்களுர் அணியை சிறப்பான பவுலிங் மூலம் கட்டுப்படுத்தியது டெல்லி அணி என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி அணி சார்பில் சிறப்பாக பவுலிங் செய்த குல்தீப் யாதவ் 4 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகளை பெற்று 23 ரன்கள் வழங்கி 1 ஓவர் மெய்டன் செய்து அணிக்கு மிகவும் உதவினார்என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பெங்களூர் அணி அளித்துள்ள இலக்கை அடைந்து ஐபிஎல் 2023 ஆம் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்யுமா.?? என்று பொறுத்திருந்து காண்போம்.