ஐசிசி யின் சிறந்த வீரருக்கான விருதை வெல்ல ரவீந்திர ஜடேஜா தேர்வு..!! ரசிகர்கள் பாராட்டு..!!

இந்திய அணிக்காக காயத்தில் இருந்து மீண்டு வந்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஐசிசி யின் பிப்ரவரி மாதத்தின் சிறந்த வீரருக்கான விருதை பெற தேர்வாகி உள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது, இந்த தொடரில் இந்திய அணி முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை இருப்பதற்கு முக்கிய காரணம் அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா தான் என்று கூறினால் மிகையில்லை.
தற்போது நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் தொடரில் ரவீந்திர ஜடேஜா இந்திய அணிக்காக பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார், குறிப்பாக நடந்து முடிந்துள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 21 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.அதில் பிப்ரவரி மாதத்தில் மட்டும் 17 விக்கெட்கள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட ஜடேஜா ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பதிவு செய்த 70 ரன்கள் அணியின் வெற்றிக்கு மிகவும் உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.உலகின் நம்பர் 1 ஆல்ரவுண்டராக விளங்கும் ஜடேஜா தற்போதைய நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகள் பெற்ற வீரராக உள்ளார்.
இந்த விருதை வெல்ல இங்கிலாந்து அணியின் இளம் வீரர் ஹார்ரி ப்ரூக் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் குடாகேஷ் மோதி ஆகிய இருவரும் தேர்வாகியுள்ளனர். நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி சார்பில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்கு உதவிய நிலையில் ஹார்ரி ப்ரூகும், டெஸ்ட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வெற்றியை பெற்று தரும் வகையில் சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்திய நிலையில் குடாகேஷ் மோதியும் தேர்வாகியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணிக்காக காயத்தில் இருந்து மீண்டு கலந்து கொண்ட முதல் தொடரிலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தற்போது ஐசிசி யின் பிப்ரவரி மாதத்தின் சிறந்த வீரருக்கான விருதை வெல்ல தேர்வாகி உள்ள ரவீந்திர ஜடேஜாவை கிரிக்கெட் ரசிகர்கள் கிரிக்கெட் நிபுணர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.